உன்னை நினைத்து உருகியது இல்லை,
உனக்காக கவிதை புனைந்ததும் இல்லை,
உன்னுடைய நினைவுகள் என்னுடைய தூக்கத்தை மறக்கடித்ததும் இல்லை !!
அழகு சிலையாம் நீ ! ஆனால் உன்னுடைய அழகு என்னை சலனப்படுத்தியது கிடையாது,
எல்லாரையும் திமிராக பார்க்குமாம் உன் சுடிதார் பட்டாம் பூச்சிகள் ! !
எனக்கு அந்த பட்டாம் பூச்சிகள் நிறம் கூட நியாபகத்தில் இல்லை,
படுக்கையில் உன்னை நினைத்து தூக்கம் வராமல் புரண்டது கிடையாது,
கனவுகளில் உன்னை தொலைத்து தேடியதும் கிடையாது,
இப்படி எந்த காரணம் இல்லாமல் வருவதற்கு பெயர் தான் [...]
நவம்பர், 2008 க்கான தொகுப்பு
வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம்
Posted in கவிதை, காதல், குறிச்சொல் இடப்பட்டது காதல், மொக்கை on நவம்பர் 25, 2008 | 27 மறுமொழிகள் »
அன்புள்ள அப்பாவிற்கு
Posted in வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது அன்பு, அப்பா on நவம்பர் 5, 2008 | 27 மறுமொழிகள் »
அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில் சைக்கிளின் முன் bar என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில் நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது நியாபகம் இருக்கிறதா?
எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே [...]

















