அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில் சைக்கிளின் முன் bar என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில் நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது நியாபகம் இருக்கிறதா?
எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே இருக்கும் உங்கள் முகம் உங்கள் தோளிற்கு மேல் வந்ததும் என்னுடைய கோரிக்கைகள் முழுவதும் அம்மா முலமாகவே உங்களிடம் வரும். ஒவ்வொரு தடவையும் அது எனக்கு தேவை தான என்று அறிந்து தான் முடிவு எடுப்பீர்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது முதல் நேரம் தவறாமல் கடைபிடிக்கும் உங்களின் ஒவ்வொரு பழக்கமும் தான் இன்று என்னை முழுதுமாக அக்கிரமித்து உள்ளது.
+2 படிக்கும் போது மறைத்து வைத்திருந்த என்னுடைய காதல் கடிதத்தை அம்மா உங்களிடம் காட்டிய போதும் கூட மிக மிக மென்மையாக எனக்கு புரிய வைத்தீர்களே அப்பா.எப்போதும் காலையில் லேட்ஆக எழும் போதே உங்களின் திட்டுக்களுடன் தான் எழுவது வழக்கம் ஆனால் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து இருக்கும் இப்போதெல்லாம் நினைத்து பார்க்கிறேன் , காலை 8 மணி வரை நிம்மதியான உறக்கம் , ஆனாலும் உங்களின் திட்டுக்கள் இல்லாமல் இந்த காலைகள் எனக்கு வெறுமையாகவே போகிறது.
ஒவ்வொரு முறையும் நான் நெடுந்தூர ஓட்ட போட்டியில் ஜெய்க்கும் போதெல்லாம் என்னமோ நீங்களே ஓடி ஜெய்த்தது போல பூரித்து போவீர்கள் ஆனால் அந்த பூரிப்பை கூட என்னிடம் காட்டாமல் , அம்மா முலமாக தான் எனக்கு தெரியும் நீங்கள் பூரித்துப் போனது அதனால் உங்களிடம் பாராட்டு வாஙகி விட வேண்டும் என்றே நான் ஓடி ஓடி வாங்கிய பதக்கங்கள் இன்று உங்கள் பெயரை தான் சத்தமிட்டு சொல்கிறது என் அறையின் மேசைக்குள் இருந்து.
உங்களுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடியதாக எனக்கு நியாபகமே இல்லை, இப்போது கூட உங்களுக்கு வாழ்த்து அட்டையாவது அனுப்ப நினைக்கிறேன் ஆனால் ” இதுக்கு போய் எண்டா காச செலவு” பண்ற என்ற திட்டு நிச்சயமாக வரும்
ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவே இல்லை அப்பா உங்களுக்கு என் மீது தான் இவ்வளவு பாசம் இருக்கிறதே ஆனால் அதை ஒரு முறை கூட நேரடியாக என்னிடம் முழுமையாக காட்டவில்லயே ஏன் ???
எனக்கு மட்டும் அல்ல என்னை போல நிறைய பேருக்கும் இப்படித்தான் ஒரு சந்தேகம் “எல்லா அப்பாவுமே இப்படி தானா” ???
ஆனாலும்ஒன்றுசொல்கிறேன்அப்பா
உங்களுக்கு ஒருமுத்தம் கொடுக்க ஆசை இந்த பிறந்தநாளுக்கு !!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!



















really superb i have no any other word to say
நல்லாயிருக்கு.
என்னுடைய அப்பாவிற்கு நான் எழுதியது போலவே உள்ளது.
பாராட்டுக்கள்.
romba nalla irukku
sweet! nice posting…
வாழ்க்கையினை கொஞ்சம் பின்னுக்க பார்க்க வைத்ததிற்கு நன்றிகள்.
Excellent Satheesh
உங்கள் உணர்வை அழாகாக எழுதியிருக்கிறீர்கள்.
//ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவே இல்லை அப்பா உங்களுக்கு என் மீது தான் இவ்வளவு பாசம் இருக்கிறதே ஆனால் அதை ஒரு முறை கூட நேரடியாக என்னிடம் முழுமையாக காட்டவில்லயே ஏன் ??? //
பொதுவாக அம்மா நமக்கு அன்றாடம் செய்யும் வேலைகளால் இன்னும் நெருங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு அன்பை வெளிப்படுத்த நிறைய சந்தர்பங்கள் கிடைக்கிறது. ஆனால் அப்பாவிற்கு அந்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு, அதனால் அப்படி தோன்றுகிறது.
உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள், அவருக்கு, அதை போல் சந்தோஷம் வேறு கிடையாது.
very nice..ppaa..
ரொம்ப அழகா இருக்கு அடலேறு, it happens to everybody!
Ella Appanugalum Ippadi thaan…
Naam Kooda naalaikku ipaadi thaan iruppom…
Unga Post Nalla irunthathu Boss…
@ கனசேகர்,
நன்றிங்க கனசேகர், அலுவலகத்துல கொஞ்சம் வேலை
அதிகம் அதான் மறுமொழிகள் ஒடனே மட்டருக்க
முடியல .தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க
@ சேகுவேரா
நன்றிங்க சேகுவேரா, அலுவலகத்துல எல்லா தமிழ்
வலைபூக்களையும் தடை பண்ணிட்டாங்க அதான்
நண்பர்கள் வலைப்பக்கம் வர முடியல , சேகுவேரா
உங்கள் முதல் பின்னுட்டதிர்க்கு நன்றிகள் பல
நன்றிங்க பங்கஜம் , ராம் தங்களின் முதல் வருகைக்கும்
நன்றிங்க குந்தவை , ஆமா நீங்க சொல்றதும் சரி தான்
பின்னுட்டத்திற்கு நன்றிகள்
சுகன்யா ,ஆட்காட்டி ,உமா , காந்தி , இங்கிலீஷ்காரன் அனைவரின் வருகைக்கும்
பின்னுட்டதிர்க்கும் நன்றிகள் பல . தனி தனியா நன்றி சொல்ல முடியலங்க தப்பா
நினைக்காதீங்க .
அடலேறு, உங்களிடமிருந்து இன்னொரு அருமையான பதிவு.எத்தனையோ மகன்களின்/மகள்களின் குரலாக உங்கள் பதிவு உள்ளது என்று சொன்னால் அது மிகை அல்ல.
நீங்கள் கேட்டு இருக்கிறீர்களே:
//எனக்கு மட்டும் அல்ல என்னை போல நிறைய பேருக்கும் இப்படித்தான் ஒரு சந்தேகம் “எல்லா அப்பாவுமே இப்படி தானா” ???//
ஆம், எல்லா அப்பாக்களுமே இப்படித்தான்.
நண்பர் அடலேறு, உங்களுக்கு இன்னொரு தொடர் பதிவு எழுத ஒரு வாய்ப்பு.
தங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடையப் பதிவைப் பார்க்கவும். நன்றி.
ஆமாங்க மோகன் , எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் ,
என்னமோ கண்டிப்பா இருக்க மாதிரி காட்டிட்டே
இருக்கறது , அது சரி இருக்கட்டும் ஆனா கொஞ்சம்
பாசத்த காட்னா தான் என்னவாமா?????
நன்றிங்க மோகன் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு, ஆனா
மோகன் இந்த தடவ தொடர் பதிவுல கலந்துக்க
முடயுமான்னு தெரியல. இந்த மாசம் முழுதும்
வேலைக்கு புடிச்சுட்டாங்க என்னைய. நிறைய பயணங்கள்
அப்பறம் அலுவலகத்துல எல்லா வலை பூக்கலயும் தடை
பண்ணிட்டதால வலை பக்கங்களை படிக்கறதே முடியாம
போட்சு. தொடர் பதிவுல கலந்துக்க கண்டிப்பா முயற்சி
பண்ற மோகன் நன்றிகள்.
Miga arumai Adaleru .. Meendum oru murai nirubithu viteergal .. Ungal thiramiyai .. Vaazhthukkal
நன்றிங்க அமுதம் , உங்களுக்கும் இந்த நினைவுகள்
கண்டிப்பா இருக்கும் , அப்படின்னா நீங்களும் ஒரு வலை பூ
ஆரம்பிக்கலாமே
Fantastic………
I could see a lot of hardwork in putting this site at operation in the world’s sweetest language………..
Good Work………
My heartiest wishes for this site to responsibily encourage the liberations of tamil……
regards
Razigan
நன்றிங்க ரசிகன் ,
தங்களின் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் , மற்றும்
தங்களின் வாழ்த்துக்கும்.
அன்புள்ள அடலேறு,
அழாகான கடிதம்… ஆனால் எல்லா அப்பாக்களும் அப்படி இல்லை.. எனது அப்பா எனக்கே ரொம்ப அழகா கடிதம் எல்லாம் எழுதி அனுப்பி இருக்கிறார்… பொதுவாக வேலைக்கு செல்லும் அப்பாகளுக்கு, பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க நேரம் கிடைப்பது இல்லை..
அதே நேரத்துல நம்து சமுதாயத்துல எல்லா உறவுகளும், வெளிப்படையா தங்களின் உணர்வுகளை வெளிப் படுத்த ரொம்ப தயங்கறாங்க.. பிறந்த நாளுக்குன்னு இல்லை ..அடுத்த தடவை நீங்க எப்ப உங்க அப்பாவை பார்த்தாலும் , உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இப்ப போன் போட்டு ப்ளையிங் கிஸ் ஒன்னு அனுப்பி வசுண்டுங்க.. ஹி வில் பி ஹாப்பி .. அம்மாவையும் மறந்துடாதீங்க..
அழகான பின்னுட்டம் கண்டிப்பா ப்ளையிங் கிஸ் அனுப்பும் எங்க அப்பாக்கு.
தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க ஜானு
As a father I cried after reading this post !
My dad did all these things . But he spent most of his life in Army….. He had a faith in me even after I could get admission only in BA Economics.
Today I have every thing- Good job, nice family, loving kids, Car, House etc but he never seen me growing as he passed away when I was just 23 some 19 years back
All the best to you !
நன்றிங்கள் பாதம் அய்யா. இந்த சிறுவனின் எழுத்துக்கள் கூட தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது எனும் போதே தெரிகிறது உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையேயான பாசம். தொடர்ந்து வலைப்பக்கம் வாருங்கள். இன்னும் நிறைய நினைவுகளை புரட்டி போடுவோம்