எதிர் கூர்தலறம்

. சட்டென திறக்கும் போது சிதறி ஓடும் பல்லியாய் கலைந்து போனது நினைவுகள் 'புள்ளைக்கு பசி எதாவது குடுங்க' என அவள் யாசிக்கும் போது. பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய் தலை சிலுப்பிக்கொள்ளும் கோவில் ஆடாய் சட்டை பைக்குள் முகம் புதைக்கும் விரல்கள் "சில்லறைக்கென" . கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும் சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும் நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை... Continue Reading →

கொஞ்சம் காதலித்து பார்

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா? அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ? அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ? அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா... Continue Reading →

அழகிய வலை பூ (பதிவர்) விருது

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள். இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் , புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும், புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.

கடைசி பக்க கிறுக்கல்கள் -6

நீர் உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய் நிலம் உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி காற்று நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின் முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள் ஆகாயம் நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய... Continue Reading →

கடைசி பக்க கிறுக்கல்கள்-5

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை. அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய். உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை "164" முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் கொஞ்சம் அவசியமாய் விரல் பற்றி... Continue Reading →

இலக்கண காதல் -1

பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று ---------------- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம் நீ + வெட்கம் + வெகுளி = கவிதை தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம்,... Continue Reading →

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑