உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் கொஞ்சம் அவசியமாய் விரல் பற்றி நடக்கையில் சொல்லி விடமாட்டேனா.., என பலவருடம் கழித்து தாய் நாடு திரும்பும் பயணியென, தனிமையில் காதல் சொல்ல வாய்ப்பு கிடைக்கட்டும் என்று காத்திருக்கிறேன் இந்த முற்றுப்பெறாமல் குழம்பிப்போன கவிதை போல….
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


















அன்புள்ள அடலேறு ,
மிக அழகான கவிதை. எனக்கு முதல் வாய்ப்பு தந்தற்கு நன்றி..
இந்த கவிதை மிகவும் அருமை, எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை.
நீ மிகவும் திறமைசாலி , புத்திசாலி
உன் கவிதை பயணம் தொடர வாழ்த்துக்கள்.!!!!
நன்றிங்க சுரேஷ் அண்ணா, கவிதை வரிகளை மாற்றி அமைக்க தங்களின் கருத்துக்கள் உறுதுணையாய் இருந்தது
வணக்கம் அடலேறு நான் முன்னமே சொன்னது போல தங்கள் கவிதை வரிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது . பாராட்டத்தக்க வேண்டிய விடயம் .
சுரேஷ் சொன்னது போல “” நீ மிகவும் திறமைசாலி , புத்திசாலி “” என்ன இது ?
மாற்றமா என்னனு எனக்கே தெரியல நீங்க தான் சொல்றீங்க. சுரேஷ் வந்து ஒரு பாசக்கார அண்ணா அவரு எப்பவுமே நம்மள உசுப்பேத்தி உசுப்பேத்தியே அடி வாங்க வெட்கரவரு, தெரியாம சொல்லிடாங்க ” நீ மிகவும் திறமைசாலி , புத்திசாலி” அதுக்குன்னு இப்படியா பொங்கறது
ஏய் இன்னடா பண்ற ? சொம்மா கவுஜ கவுஜனு சொல்லி ஏதோ கிறுக்கினு இருக்க.
வந்தியா சரக்கு அச்சயா, வாந்தி எத்தயானு கம்னு போகனும். அதா விட்டுனு கவுஜ
கவுஜனு,
சரி சுப்பராகீதுன்னு நம்ம 4 சேத்து முனிமா உன் கைல சொல்ல சொல்லிச்சு அதான் சொல்லிட வர்ட்டா
ரொம்ப நன்றிங்க குமார்.
நண்பர்களே வணக்கம் , குமார் என் அலுவலக நண்பன்,
அவன் பயன்படுத்தும் முரணான சொற்களை பெரிதுபடுத்த வேண்டாம் .
Hey adaleru,
Just kidding do not take this in to heart.
please add your mobile number and mail -ID in the home page.some of my friends asking.. most of girls
குமாரு மாதிரி நீங்க சொல்றது பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்னு பின்னுட்டம் போடணும் போல இருக்கு. ஒரே காமெடி தான் உங்களோட. நானும் யோசிக்கற அஞ்சனா. தேவை படும் நண்பர்களுக்கு
என்னுடைய மின்னஞ்சல் முகவரிய பகிர்ந்துக்குங்க
யாஹூ : adaleru@ymail.com
கூகிள் : infosat06@gmail.com
hi chavito,
vivala rasa,
i lik it macha.. keep it up ur good work..
Thanks da chavitho
காதலின் உணர்வுகள் அருமை என்றாலும், இறுதி வரிகள் உங்களுடைய சொந்த வாழ்வைப் பற்றிய வரிகள் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது….சிறிது புரியவும் மறுக்கிறது!!!!!
சொந்த வாழ்க்கை அனுபவம் எதும் இல்லை நண்பா. ரொம்ப நாள் கழித்து வெளிநாட்டில் இருந்து வரும் ஒருவன் தன் குடுபத்துடன் செலவு செய்ய எப்படி தனிமை வேண்டி காத்திருப்பானோ அது மாதிரி ஒருவன் நீண்ட நாள் மறைத்து வைத்த காதலை சொல்ல காத்திருக்கிறான் என்பதுவே.
கலக்கற மச்சி.. அஞ்சு தடவ படிச்சதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் புருஞ்சா மாதிரி இருக்கு.. ஆனா கவிதைனா இப்படி தான் இருக்கணும்.. புருஞ்ச மாதிரி இருக்கணும் ஆனா புரிய கூடாது
ஆமா மச்சா , புரியனும் ஆனா புரிய கூடாது, ஆனா நா அத மனசுல வெதச்சு எழுதலடா. அது தன்னால வந்துருச்சி. பைக் அ பாத்து ஓட்டுங்க கைப்புள்ள