
நீர்
உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்
நிலம்
உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி
காற்று
நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயம்
நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் பண்ணுகிறது ஆகாயம், கண்டவுடன் இயலாமையால் நாய் குட்டியகவோ பூனை குட்டியகவோ பரிசளித்து போகிறது ஆங்காங்கே வானம் முழுக்க.
நெருப்பு
உனக்கென்ன அமைதியாய் கல்லூரிக்குள் சென்று விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில் சுட்டெரிக்கிறது சூரியன் மாலை வரை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


















பஞ்ச பூதங்களை வைத்து காதலா???
காதல் வழியுது!!!!
அருமை…
குறிப்பு – 1
உங்க காதலி இன்னும் கல்லூரி படிப்பை முடிக்க வில்லை!!!!
வணக்கம் நண்பா ,
இருந்தாதான கல்லுரி படிப்ப முடிக்கறதுக்கு, இவை அனைத்தும் முழுக்க முழுக்க புனைவு நரேஷ்.
சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ் ஒருத்தர் இல்லாமயே அவங்கள பத்தி ஒரு பதிவு எழுதுனா எப்படி இருக்குமோ அது மாதிரி தான் நண்பா இதுவும்.
இதில் கவிதையின் சில அம்சங்கள் ஒளிந்திருகின்றன என சொல்லலாம்!, வார்த்தை பிரயோகம் அதை உறுதிப்படுத்துகிறது! ஆனால் மொக்கை வகையறாவில் இதை சேர்க்க முடியாது!
ரொம்ப தேங்க்ஸ் தல,
மொக்க TAG-க துக்கீற வேண்டியதுதான்
மச்சி கலக்கல்..
//உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி //
அருமையான வரி மச்சி..
தேங்க்ஸ் டா மாபி.
Hi Dear Thambu,
மிகவும் அருமை அடலேறு. பஞ்ச பூதங்களையும் அருமையாக உன் கவிதையில் , காதலில் உணர்த்தி இருக்கிறாய்.
உண்மையிலே உன் கவிதைகளில் புதிய மாற்றங்கள் தெரிகிறது. கலகர தம்பு.
உனக்கு அன்பானவள் கிடைக்க வாழ்த்துக்கள் !!!!!!!!!!
Keep Going. All the Best.
தேங்க்ஸ் சுரேஷ் பிரதர்.
//உனக்கு அன்பானவள் கிடைக்க வாழ்த்துக்கள் //
அரம்பிட்சுட்டீங்களா உங்க சித்து விளையாட்ட
//சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ் ஒருத்தர் இல்லாமயே அவங்கள பத்தி ஒரு பதிவு எழுதுனா எப்படி இருக்குமோ அது மாதிரி தான் நண்பா இதுவும்.//
நான் டோடல் சரண்டர்!!!!
என்ன நண்பா அது நான் டோடல் சரண்டர்…???
நல்ல வார்த்தையா இருக்கே
அருமையா இருக்கு…
கற்பனையிலேயே இப்படியா? காதலிக்கும்போது எப்படியெல்லாம் வருமோ!
காதலியும் பஞ்ச ‘பூதங்களுமா?’
—
என்னது மொக்கையா?
ஹாய் மாபி எப்படி இருக்க ? பின்னுட்டத்திற்கு நன்றிகள் மாபி
நலம் மச்சி,
போன் நம்பரை அனுப்பி வைக்கவும்.
மாபி என்னோட அலை பேசி எண் 9940149424
Beautiful …especially nilam and neruppu kavithai. Have your work got published in any magazine?
இல்லை வாணி , அதற்கான எந்த வித பிரயத்தனமும் எடுக்கவும் இல்லை, எடுத்தாலும் பிரசுரிக்க படுமா என்பது கேள்விக்குறியே??
நன்றிங்க வாணி தங்களின் பின்னுட்டத்திற்கு மற்றும் சிறந்த பதிவர் விருதுக்கு
Take initiative to publish …You have a great talent.
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் தோழி. உஙகளுடைய வார்தைகள் பெரும் ஊக்கம் தருகின்றன. நன்றி
யப்பா யப்பா! என்ன இது! பஞ்ச பூதங்கள் வழியாவும் காதல் மழைய இப்படி பொழியறீங்க.
//நெருப்பு
உனக்கென்ன அமைதியாய் கல்லூரிக்குள் சென்று விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில் சுட்டெரிக்கிறது சூரியன் மாலை வரை//
ரொம்ப ரசிச்சேன்.
அருமையான வார்த்தைகள் அடலேறு.
ஏதோ தோனுச்சு எழுதீட்ட பிரேமா.நன்றிங்க உங்க பின்னுட்டத்திற்கு.
ஐம்பூதங்களின் அடக்கம் ஆண்டவனுக்கு மட்டுமன்று. அன்பிற்க்கும் உண்டென்பதால் தான் அன்பே சிவம் என்றனர்.
அருமை .
வாழ்த்துக்கள்
அடலேறு.
நன்றிங்க கீதா தங்களின் பின்னுட்டத்திர்க்கு, அன்பினால் அனைத்தும் முடியும் என்பது உங்களின் நம்பிக்கையுமா?
அன்பு+நம்பிக்கை=உயிரின் இயக்கம்
மறுமொழியிலும் கவிதை மொழி அருமை கீதா.