.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத எனக்காக ” ஓ வென பெருங்குரலெடுத்து”
கிளம்பியது மலை ரயில்.
பின் சேர்ப்பு : ’கூர்தலறம்’ என்பது செயல் அல்லது இயக்கதிற்கு ஏற்ற எதிர்வினை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



















நல்லாயிருகு மச்சி…
மன்னிக்கனும், ஆனா தலைப்புதான் புரியல.
(தமிழ்ல எழுதிருப்பாய்ங்க போலருக்கு, நம்ம நெலம இப்படி ஆகிருச்சே மச்சி)
’கூர்தலறம்’ என்பது செயல் அல்லது நீயூட்டனின் மூன்றாம் விதி னு சொல்லாம் நண்பா.
இயக்கதிற்கு ஏற்ற எதிர்வினைன்னு கூட எடுத்துக்கலாம்
அட்டகாசம்…
தலைப்பு, கவிதை இரண்டுமே…
ஒவ்வொன்றிர்க்கும் கொடுத்திருக்கும் உவமையும் சரி, கடைசியில் ’ஓ’ வென கிளம்பிய ரயில் என்றதும் மிக அருமை…
சின்ன ஆலோசனை: கவிதை முடிவில், கூர்தலறத்தின் தெளிவான பொருளைச் சேர்க்கலாமே?
நரேஷ்,
கண்டிப்பாக சேர்க்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கள் பல
மாப்ள உனக்கு மெயில் பண்ணுனே பார்த்தியா ?அப்போ இருந்த
பீல் ல கமெண்ட் போட்ருந்தா இன்னம் நல்லா இருந்துருக்கும்
இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போயடுல
நீ கலக்கு மாப்பி
இதேபோல வித்யாசமான் உணர்வுகளோட உன் சந்திப்பை எதிர் பார்கிறேன்
வாழ்த்துக்கள்
இல்ல நண்பா,
/இதேபோல வித்யாசமான் உணர்வுகளோட உன் சந்திப்பை எதிர் பார்கிறேன்//
கண்டிப்பா எதிர்பாக்கலாம் நண்பா
பின்னுட்டத்திற்கு நன்றிகள்
கவிதையின் முடிவில் மனம் நெகிழ்ந்து போகிறது. மேன்மேலும் பல கவிதைகள் படைத்திட வாழ்த்துகள் அடலேறு
நன்றி நிலா,
மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க தூண்டியது
உங்கள் ஆக்கமும்,ஊக்கமும் தான் தவிர வேரொன்றும்
இல்லை நண்பா.
கவிதை அருமை நண்பரே..எனக்கு இந்த கவிதையினை படிக்கும்போது மகேந்திராவின் கமராவின் ஊடே தெரியும் காட்சி அமைப்பும் லொக்கேசனும் தெரிந்தன. கவிதை ஒரு உணர்வாகவே இருந்தது..
நன்றி நண்பரே. தேவதையை கேட்டதாக சொல்லவும்.
நல்ல உணர்வு.. !!!
நன்றிங்க யாழினி, தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்
மிக மிக அருமையான பதிவு தோழரே.
நன்றிங்க உமா.
நல்ல கவிதை. ஒரு புது தமிழ் வார்த்தை கற்றுக்கொண்ட சந்தோஷத்தோடு JP.
நன்றிங்க JP நீண்ட நாட்களாக தங்கள் பின்னூட்டத்திர்க்கு பதிலலிக்கவில்லை என்று இன்று தான் கண்டுபிடித்தேன் நண்பா.
வருத்தம் தெரிவிக்கிறேன். பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க JP
//சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்//
முதல் வரியே மிக அருமை…….
நன்றிங்க மாரி.”’நினைவகம் ”” எப்படி போகுது?