முன்கதைச்சுருக்கம்:
அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற [...]
நவம்பர், 2009 க்கான தொகுப்பு
மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
Posted in Adaleru, Girl, Imagination, Meeting, life, love, அடலேறு, சிறுகதை, தமிழ், பள்ளி, புனைவு, பொது, வலை பக்கம், வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, அப்பா, பிறந்தநாள், பெண், வாழ்க்கை on நவம்பர் 30, 2009 | 24 மறுமொழிகள் »
முகம் தொலைத்தவன்
Posted in Adaleru, Imagination, scribblings, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பொது, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, சோகம், புனைவு on நவம்பர் 18, 2009 | 19 மறுமொழிகள் »
(புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்
***********************
(நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக முகம் தொலைத்தவனுக்கு
நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure [...]
அபரஞ்சிதா
Posted in Adaleru, Friendship, Girl, Imagination, Meeting, life, love, scribblings, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, புனைவு, போட்டி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அனுபவம், அறிவிப்பு, இலக்கணம், கம்ப்யூட்டர், காதல் புதினம், சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி, சிறுகதை, புனைவு, பெண், பேச்சிலர், life style on நவம்பர் 12, 2009 | 79 மறுமொழிகள் »
கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில் இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]
அடங்காபிடாரி
Posted in Adaleru, Sister, அடலேறு, அனுபவம், கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு, நினைவு, பள்ளி, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணா, அனுபவம், அன்பு, தங்கச்சி, தமிழ், வாழ்க்கை, வாழ்த்து, life style, thanks on நவம்பர் 6, 2009 | 45 மறுமொழிகள் »
பள்ளி முடிந்து வரும்
மாலை நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]
சென்னை வலை பதிவர் சந்திப்பு –07/11/09
Posted in Adaleru, Meeting, அறிவிப்பு, பதிவர், பதிவர் சந்திப்பு, பொது, வலை பக்கம், குறிச்சொல் இடப்பட்டது பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், Bloggers Meeting on நவம்பர் 4, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்.
அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள்.
சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy [...]
நிசப்தம்=நீ+சத்தம்
Posted in Adaleru, அடலேறு, கவிதை, பொது, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது ஈழம், கவிதை, சோகம், தாக்கம் on நவம்பர் 4, 2009 | 13 மறுமொழிகள் »
நண்பனின் நிசப்த கவிதையின்
லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய
நிசப்த அலையொன்று
என்னையும் ஆட்கொண்டது
கால எந்திரத்தின் வழியே
நிசப்தத்தை நிறுத்த
எண்ணியபோது கடிகாரத்தின்
வழியாய் புகுந்து கொண்ட
நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று
நிறுத்திப்போனது நிசப்தவெளியில்.
ஆழியெங்கும் நிசப்த அலைகள்
உணர்ச்சியின் வேகத்தில்
கெட்ட வார்த்தையாய்
வெளியேறிய எச்சில்
குமிழிகள் யாவும்
நிசப்த வெளியெங்கும்
சலனமற்று கரைந்த நேரத்தில்
கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கத்தி விரைத்தது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஈழ குழந்தை
நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான என் கவிதை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

















