
நண்பனின் நிசப்த கவிதையின்
லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய
நிசப்த அலையொன்று
என்னையும் ஆட்கொண்டது
கால எந்திரத்தின் வழியே
நிசப்தத்தை நிறுத்த
எண்ணியபோது கடிகாரத்தின்
வழியாய் புகுந்து கொண்ட
நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று
நிறுத்திப்போனது நிசப்தவெளியில்.
ஆழியெங்கும் நிசப்த அலைகள்
உணர்ச்சியின் வேகத்தில்
கெட்ட வார்த்தையாய்
வெளியேறிய எச்சில்
குமிழிகள் யாவும்
நிசப்த வெளியெங்கும்
சலனமற்று கரைந்த நேரத்தில்
கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கத்தி விரைத்தது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஈழ குழந்தை
நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான என் கவிதை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


















அடலேறு,
அதெல்லாம் எப்படி நிறுத்துவது? நினைவு என்ற இருக்கும் வரை எதையும் மறக்க முடியுமா?
அது யார் கண்டுகொள்ளாத ஏக்கம்? அரசியலை அழகாகப் புகுத்தியிருக்கிறாய்.
பிறகு, அந்த நிசப்தக் கவிதை நண்பன் யாரோ?
ஆமாம் நண்பரே, நாம் அனைவரும் கண்டுகொள்ளாத ஏக்கம் தான்.
நிசப்த கவிதை நண்பர் நிலா ரசிகன். பின்னூட்டதிர்க்கு நன்றி நண்பா
யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா ?
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல நண்பா, அலை பேசி வழியா கண்டிப்பா விளக்கம் தருகிறேன்
அன்னிக்கு சொன்னது தான் மச்சி!! ஈழ குழந்தை கரைந்து போகவில்லை! மாவீரர் நாளுக்கு காத்திருக்கிறேன் !
காத்திருப்போம் நண்பரே
அதுபோன்ற குரல்கள் மூகாரி என்று சொல்லிக்கொள்ளபவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சொல்லிக்கொள்ளட்டும், ஆனால் இனி ஒலிக்கப்போவது பூபாளமே என்பதில் எள்ளவும் சந்தேகம்வேண்டாம்.
விடுதலை உணர்வு என்பது பூவல்ல கசக்கிவிட்டால் மீண்டும் மலராமல் இருப்பதற்கு…
அது பொன்போன்றது சுடச்சுட மிளிர்வது..
அதுமிளிரும், ஜோதியாக ஒளிரும் என்ற உங்கள் திடத்துடன் நானும் உவகையுடன் இணைந்துகொள்கின்றேன். நண்பா..
வாங்க ஜனா, எதிர்பார்புடன் காத்திருப்போம்
இந்த நிசப்தம், கோபம், ஏக்கம், ஆத்திரம், இயலாமை, சுயவெறுப்பு என்ற பலவற்றை வெளிக்காட்டியுள்ளது. அருமையான கவிதை. ஆனால் அங்கு தற்போது ஏற்பட்டுள்ள நிசப்தம், ஒரு புயலுக்கு பின்னதானதும், ஊழிக்கு முன்னதானதமான நிசப்தம்..
நன்றிங்க சயந்தன் தங்களிம் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திர்க்கும்.
//ஒரு புயலுக்கு பின்னதானதும், ஊழிக்கு முன்னதானதமான நிசப்தம்//
ஆமாங்க சரியா சொன்னீங்க
நிசப்தம்தான் நிரந்தரமோ என்று எண்ணும் மனநிலையில்தான் தற்போது பலரும் இருகின்றனர்
.
விரைவில் ஈழம் மலரும்… வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்திர்க்கு நன்றிங்க நண்பா.