
பள்ளி முடிந்து வரும்
மாலை நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



















எனக்கு தங்கை இல்லை.ஆனால் இதை படிக்கும் போது இந்த மாதிரி தங்கை இல்லையென்று ஏக்கமாக இருக்கிறது அடலேறு.
ஆமாங்க கார்த்தி ஏக்கமாக தான் இருக்கிறது எனக்கும் ஏன் இந்த மாதிரி தங்கை இல்லையென்று
மச்சி கலக்கல். இத நீ வெகுஜனப்பத்திரிக்கைக்கு அனுப்பு..
அன்புக்கு நன்றிங்க புவனேஷ்.
‘ .’
சொல்ல வார்த்தைகளில்லை!!
நம் வாழ்விலும் இது போல நடக்காதா என நினைக்க வைக்கிறது!!!
(என் ‘நினைவகம்’ படு மொக்கையா போய்க்கிட்டிருக்கு…உருப்புடியா எதாச்சும் எழுத முயற்சிக்கிறேன்.)
பின்னூட்டத்திர்க்கு நன்றிங்க மாரி முத்து. நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்
அடலேறு,
மிக நேர்த்தியாக எழுதுகிறாய்.
எத்தணை முறை தான் சொல்வது உன் கவிதை நல்லா, சூப்பரா இருக்குனு …………..
நன்றிங்க சுரேஷ்.
எனக்கு தங்கை இல்லை.ஆனால் பதிவுலகில் நிறைய பேர் அண்ணா என்று அழைக்கும் போது மகிழ்ச்சியே..
நல்லாயிருக்கு.. நண்பா..
வாழ்த்துகள்..
உங்க பின்னூட்டம் பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாக இருக்குங்க வண்ணத்துப்பூச்சியாரே.
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சூர்யா
நல்லா இருக்குன்னு நிறைய பேரு சொல்லிட்டாங்க……..நெஞ்சை தொட்டு விட்டது நண்பா…..
தங்களின் முதல் பின்னூட்டத்திர்க்கு நன்றிங்க நண்பரே
Superb Machi.. it reminds my sister now.
Thanks chavito.
இப்படி எல்லாம் சொல்ல எனக்கொரு அண்ணா இருக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
ஆமாம் அக்கா முன்னமே சொன்னது போல எனக்கும் தங்கை இல்லாதது வருத்தமாகவே இருக்கிறது
மிகவும் அருமை.
வாழ்த்துகள்!
நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை
nice
இங்க தங்கச்சி பாசக்காரியாகத்தானே தெரிகின்றாள். .இந்த அண்ணன்காரன்தான் அடங்காப்பிடாரியாக இருப்பான்போல..
ஆஹா ஹா அவனும் ஒரு அடங்காபிடாரி அண்ணன் போலத்தான் தெரிகிறான்
யோவ் அடலேறு,
ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல! உனக்கு எழுதவேண்டிய பின்னூட்டத்தையே ஒரு பதிவா எழுதலாம் அவ்வளவு இருக்கு!
சும்மா…..கலக்கிட்ட போ! உண்மைய சொல்லனும்னா, இதில நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும், காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது! அவ்வளவு அழகு கவிதை!
வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!
வாங்க பதம ஹரி,
//ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல!//
இன்னும் நக்கல் குறையலயே
//இதில நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும்,//
வழக்கம் போல இதுவும் புனைவு தான் நண்பா, தங்கச்சி இல்லாத ஏக்கம் எனக்கும் இருக்கு
//காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது// இது ஒரு அழகிய கவிதை
//வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!//
கண்டிப்பா எதிர் பாருங்க நண்பரே!!!
பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஹரி
அடலேறு ரெம்ப அருமையா இருக்கு. அப்படியே நான் கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்குது நினைத்துபார்த்தால். ஆனால் உங்களை மாதிரி எனக்கு கவிதையாக சொல்லத்தெரியவில்லை…ம்… என்னுடைய ஏக்கத்தை அதிகபடுத்திவிட்டீர்கள். நானும் எங்க அண்ணாவும் செய்யாத சேட்டை கிடையாது, பண்ணாத அட்டகாசம் கிடையாது.
நன்றிங்க குந்தவை, இந்த பின்னூட்டத்திர்க்கு நன்றியை தவிற வேறு என்ன சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது
தங்கச்சி கவிதை என்றதும் எனக்கு லக்கிமான் திரைப்படத்தில் ராதாரவி எழுதிய “தங்கச்சிக்கு கண்ணாளம்”
என்ற காட்சிதான் தோன்றும். ஆனால் உண்மையில் சிறப்பான ஒரு கவிதையினை எழுதியுள்ளீர்கள் நண்பா. வாழ்த்துக்கள்.
நன்றீங்க டிலான். தவறனை எப்படி போகுது?
சொல்லவியலாத சோகம் முட்டித்தள்ளுகிறது. நல்ல கவிதை. ஆனால், ஸ்டீரியோடைப்.
ஸ்டீரியோடைப் பற்றி புரியலங்களே நண்பரே??
எனக்கும் என் தங்கை என்றால் உயிர் நன்றாய் இருந்தது
எனக்கு தங்கை இல்லை என்ற கவலை தான் கார்த்தி
அடலேறு,
படம் நல்லாயிருக்கு.
(அதான் நெறையா பேரு கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்கள்ல)
அஹா!!! சரி சரி..
தங்கையின் பாசம் அழகு……..மீண்டும் ஒரு தங்கையாய் வரவேண்டும்.தங்கையின் பிரிவில் தான் அருமை புரியும். பாராட்டுக்கள். l
தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்த்திற்க்கும் நன்றிங்க நிலாமதி
send ur discussions to my mail
very nice .adaleru.
நன்றிங்க உமா..
very nice. it really touched my heart
thank you for that
Anbu which means “LOVE” (in Tamil)
நன்றிங்க அன்பு.
அருமை!!!!
நன்றி நரேஷ்
mela erukum kavithai paditha peragu enaku oru annan ellai endru nenaikum pothu megivum kavalaiyaga ullathu. it is excellent and superb
அடங்காபிடாரி கவிதை மட்டுமல்ல..புகைப்படமும் ஈரம் உள்ள ரகம்.
நன்றிங்க
எனக்கு நிஜத்திலும் பள்ளி காலங்களிம் வலையிலும் நிறைய தங்கைகள்
ரொம்ப மகிழ்வாய் இருக்கு இதை படிக்க
(அடுத்த ஜன்மம்) என்பது தவிர – தூள்
பாசமான பூங்கொத்துகள் – ஒரு அண்ணனாய்.
முன்னமே சொன்னது போல முடிக்க விழிபிதுங்கியதால் அடுத்த ஜன்மம். நன்றிங்க ஜமால் அன்பிற்கு
அடலேறு
எனக்கு தங்கை இல்லை என்ற கவலை தான் கார்த்தி
அடடா இப்படியெல்லாம் கவலைப்படக்கூடாது
இனி என்னையும் தங்கையாக கொள்ளுங்கள்
என் அண்ணாக்கள் லிஸ்ட்டில் இனி நீங்களும்
வாங்க காயத்திரி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் உங்களுக்கும் ஜமாலுக்கும் , எனக்கு அக்காகாவாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம். நான் சிறுவன். அன்பிற்கு நன்றிகள்
அருமையாக உள்ளது….
நன்றிங்க ராஜேஷ்வரி தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
எனக்கு அக்காகாவாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம்.
oru pinji manasa ippadiya kasta paduthuvega
நான் டோடல் சரண்டர்