(புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்
***********************
(நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக முகம் தொலைத்தவனுக்கு
நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




















எனக்கொன்றும் புரியவில்லை. ஆனா கவிதை நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்.
நண்பா.. இந்த ரெண்டாவது கவிதைய கொஞ்சம் தமிழ்ல எழுத முடியுமா ?
அடுத்த இலக்கு சுட்ட பழத்த நவீன கவிதைக்குள்ள கூட்டீட்டு வருவது தான்
எழுதீட்டா போச்சு நண்பா
“புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்”
fantastic!!!!!!!!!!!!!
இதை படிக்கும் பொழுது,
முன்பு விகடனில் பவழ விழா வுக்காக முத்திரை ஓவிய போட்டி வைத்திருந்தார்கள் .
அதில் ஒருவன் பல முக அமைப்புகள்(உணர்வுகள் ) கொண்ட முகமூடிகளை தாங்கியிருக்கும் அலமாரியில், அன்றைய தினத்திற்க்கான முகத்தை தேர்ந்தெடுக்கும் மாதிரியான நவீன ஓவியம் ஒன்று முத்திரை பரிசு பெற்றிருந்தது.
அது ஞாபகம் வந்தது.
அந்த சிலிர்ப்பு இதை படிக்கும் பொழுதும் ஏற்பட்டது நண்பா ???????
தோன்றியது சொல்லிவிட்டேன்
பை..
ஒப்புமை உங்களுக்கு நல்லாவே வருதுங்க சுரேஷ்.
//அந்த சிலிர்ப்பு இதை படிக்கும் பொழுதும் ஏற்பட்டது நண்பா ?//
உங்க பின்னூட்டம் படிக்கும் போதும் ஒரு வித லயிப்பு இருக்குதுங்க நண்பா..
நன்றிங்க சுரேஷ் தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்.
வல்லிய சுந்தரக்குட்டன் புவனேஷ்க்கு டபுள் தேங்ஸ் (அறிமுகபடுத்தியதற்கு) !!
நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக முகம் தொலைத்தவனுக்கு”"
படம் மச்சி ….
என்ன பீலிங்கு. அட்டகாசமா இருக்கு ….
ஆனா பாருங்க அடலேறு நமக்குதான் கொஞ்சம் புரியலே…
நவீனம்னாலே புரியாது போல நமக்கு……
சரி ஒரு பெக் போட்டுட்டு வந்து படிச்சு பார்க்கிறேன்……………………
புரிஞ்சிடுச்சு….என்னன்னா 35ருபாய் அவுட் னு………கிர் எறங்கி போச்சு சாமி.
ரொம்ப ரா வா எழுதறீங்க அடலேறு….
கொஞ்சம் தண்ணி கலக்கி எழுதுங்க….அப்ப தான என்ன மாதிரி ulcer உள்ளவங்களும் நாள முன்ன வந்து போக முடியும்.
என்ன நாஞ் சொல்றது !!!!!
நண்பா.. இந்த ரெண்டாவது கவிதைய கொஞ்சம் தமிழ்ல எழுத முடியுமா ?
repeat aeeeeeiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii!!!!!!!!!!!!!!!!!!!!
தனி மடல்-ல சொல்றங்க சுரேஷ்
//அடுத்த இலக்கு சுட்ட பழத்த நவீன கவிதைக்குள்ள கூட்டீட்டு வருவது தான் எழுதீட்டா போச்சு நண்பா//
வேண்டாம் நண்பா.. அப்புறம் அந்த கவிதையும் நான் ரீமிக்ஸ் செஞ்சாலும் செய்வேன்!!
//புவனேஷ்க்கு டபுள் தேங்ஸ் (அறிமுகபடுத்தியதற்க்கு)//
இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் நண்பா?? உன் ஆபீஸ்ல ஏதோ ரெண்டு பிகர் என் போன் நம்பர் கேக்குதுன்னு சொன்ன இல்ல? இதுக்கு பதில அவங்களுக்கு என் நம்பர் கொடுத்திரு! சிம்பிள்!
தங்கச்சிகிட்ட சொல்லனும் போன இருக்கே
புதுக்கவிதை………. ரொம்ப நல்லா இருக்குங்க …
நவீனக்கவிதை ………….
(இப்போதைக்கு “வினையாலனையும் பெயர் “ஐ மட்டும் எடுத்துக்கிட்டு போய், இலக்கணத்துல என்ன அர்த்தம்ன்னு படிச்சுட்டு வர்றேன்.வந்து அப்புறமா மிச்சத்தை கவனிக்கிறேன்.)
நன்றி ..,வாங்க மாரி.
யோவ் அடலேறு…இதுவரைக்கும் கவிதையா எழுதிட்டு இருந்தே புரிஞ்சது, இப்பெல்லாம் பின்,முன்,சைடு நவீனத்துவமெல்லாம் சேர்த்து எழுதுற(பயமுறுத்துற!). சப்பாஆஆஆ…..இப்பவே கண்ணக் கட்டுதே!
நண்பா மேல மறுமொழி எழுதியிருக்கிறது நான் இல்ல(ஹி ஹி!). முதல் கவிதை சூப்பர்…படமும் தான்!
வழக்கம்போல, ரெண்டாவது கவிதைக்காக திரும்பவும் போய் 10-வது, 12-வது தமிழ் இரண்டாம் தாள் எல்லாம் படிக்கனும் போல இருக்கே……அவ்வ்வ்வ்! இந்த வெளையாட்டுக்கு நான் வரலே…..!!
விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க! கொஞ்சம் விளக்கம் குடேன்….ம்ம்ம்?
தனி மடல் -ல பதில் சொல்றங்க ஹரி
எனக்கு என்ன reaction குடுக்கறதுண்ணே தெரியலையே ….
நாங்க எல்லாம் டமில்ல கொஞ்சம் வீக்கோ! .
கொஞ்சம் கருணை காட்டுங்க அடலேறு .
என்னங்க குந்தவை இப்படி சொல்லீட்டீங்க
புதுக்கவிதை புரிந்தது. நல்ல கவிதையும்கூட.
ஆனால் நவீன கவிதை, ஒண்ணுமே புரியலை
. ஒருவேளை புரியாமலே இருக்க எழுதுவதுதான் நவீன கவிதையோ? இங்க வந்து படிச்ச யாருக்கும் புரியலை போல இருக்கே. எதுக்கும் எல்லாருக்குமா சேத்து அந்த கவிதைக்கு ஒரு விளக்கம் போடுங்க. அல்லது அந்த நவீன கவிதையை, புரியுற மாதிரி புதுக் கவிதையாவோ, மரபுக் கவிதையாவோ (அதுவும் சில சமயம் நமக்கு புரிவதில்லைத்தான் ஹி ஹி) ஆக்கிடுங்க.
சரி அக்கா
உங்களை வம்புக்கு இழுத்திருக்கேன், இங்க.http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_28.html