ஜூன், 2010 க்கான தொகுப்பு

   தமிழ் நம் தாய்மொழி. ஒரு மொழியை பற்றி சொல்லும் போதே அதன் கம்பீரமும் வரலாறும் நம்மை மட்டும் அல்ல எத்தனை எத்தனையோ அயல் நாட்டு மனிதர்களை கூட தமிழ் மீது பித்து பிடிக்க வைத்துள்ளது. நம் மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்,முக்கியமாக  செம்மொழியும் ஆகும். 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் [...]

    நீயோ ”பிறந்தநாளை” கொண்டாடிக்கொண்டிருக்கிறாய் நீ பிறந்ததற்காக அந்தநாளை  மற்ற நாட்கள் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரியுமா உனக்கு *************** பிறந்தநாள் அன்று என்னை பார்ப்பதற்காக பூக்களை  சூடிக்கொள்கிறாய் பூக்களோ உன் தலையில் ஏறி விட்ட மமதையில் உனக்கு என்னை விட பூக்கள் மீது தான் காதல் அதிகமென  வம்புக்கிழுக்கின்றன என்னை  *************** கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாய். கடல் அலையை கையிலேந்தி                      [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

உனக்கு Rover தெரியுமா என்கிறாய் தெரியாது என்கிறேன் !!! Rover தான்  Windows கணிணியில் வரும் நாய் குட்டி என சொல்லி பறக்கும் முத்தம் ஒன்றை  அதற்கு தந்தாய் Rover ஆகும்  சாத்தியங்களற்று விழி பிதுங்கி நிற்கிறேன் நான்

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே