அவள் இல்லை என்பதை நினைக்கும் போது ,
அவள் இழப்பை நான் உணரும் போது
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் …
- பாப்லோ நெருடா
மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் என்றேன். முடிக்கப்பட்ட பணிகளுக்கான அறிக்கை தானே முகில் அதை நான் அனுப்புகிறேன் . உங்கள் அம்மா முன்று முறை உங்களுக்கான வாய்ஸ் மெயில் செய்தியை விட்டுள்ளார். நீங்கள் வீட்டுக்கு கிளம்பலாம் என்று தன்னுடைய மென்மையான எந்திரக்குரலில் பேசினாள்.
நான் முகில் , இந்த கதை சொல்லுபவரின் சதியால் ராணுவ வீரனாக இருக்க வேண்டிய நான் வழக்கம் போலவே மென்பொருள் பொறியாளன் ஆக்கப்பட்டேன். மிக்கி என்னை அவசரப்படுத்தினாள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று. வீட்டுக்கு செல்வது ஒன்றும் சிரமம் தரும் விஷயம் அல்ல அலுவலகத்தில் உள்ள DEPATURE அறைக்கு சென்று GO HOME பட்டனை தட்டினால் போதும், அடுத்த நிமிடம் என் வீட்டில் உள்ள ARAVIAL அறையில் இருந்து வெளிப்படலாம்.
உள்ளங்கையில் இருந்த தொடுதிரை மானிட்டர்(Touch Screen Monitor) மினுக் மினுக் என மின்னியது மௌலி தான் சிங்கப்பூரில் இருந்து அழைத்தான், தொடுதிரையில் இருந்த பச்சை நிற பட்டனை அழுத்தியதும் மௌலி பேசியது அறுவைசிகிச்சை மூலம் காதுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள சிறிய நானோ மைக்கில் எந்தவித இணைப்பும் இல்லாமல் தெளிவாக கேட்டது.
ஹலோ முகில் எங்க இருக்க? உன்கிட்ட ஒன்னு சொல்லணும் .
நீ சொல்றது இருக்கட்டும் முதல்ல உன் இயந்திர காதலி லிச்சி எப்படி இருக்கிறாள் என்றேன்.
லிச்சிய விடு நான் V2 பிரியாவை பார்த்தேன் என்றான் .
எனக்கு தூக்கி வாரி போட்டது, பிரியா இந்த உலகத்திலேயே இல்லை. அவள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டன.
இங்கு குறிக்கப்பட வேண்டியது V2 என்ற வார்த்தை, V2 என்றால் VERSION2 என்று அர்த்தம். நாம் வாழும் இந்த கி.பி 2080 வருடத்தில் மனிதர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளுக்காக தன்னை போலவே உள்ள அச்சு அசலான இயந்திர மனிதர்களை உருவாக்கி தன்னுடைய நினைவுகள், பழக்கவழக்கங்கள், நிறைவேறாத ஆசைகள் மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த அனைத்தையும் Program செய்துவிட்டு இறந்து போவார்கள், இந்த இயந்திர ரோபோக்கள் அரசின் தலைமை கணிப்பொறியின் கட்டுப்பாட்டில் இயங்கும். தன்னுடைய எஜமான் நினைத்த ஆசைகள் நிறைவேறிய அடுத்த நிமிடமே அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விடும், அரசின் தலைமை கணிப்பொறி கட்டுப்பாட்டு அறை அறிக்கை வந்த மறுநொடி இந்த இயந்திர பொம்மைகளை அழித்துவிடும்.
நானும் பிரியாவும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்தோம், இப்போது மனிதர்கள் மனிதர்களை திருமணம் செய்து கொள்வதை விட தனக்கு எப்படி வேண்டுமோ அப்படியான குணநலன்களை கொண்ட ரோபோக்களை உருவாக்கி அவர்களை மணந்து கொள்கிறார்கள், அப்படியான ஒருவனை தான் பிரியாவின் பெற்றோர்கள் அவளுக்காக பார்த்து வைத்தார்கள் , எங்கள் காதலை கடுமையாக எதிர்த்த அவளின் பெற்றோர்கள் தான் நினைத்தது போலவே ஒரு இயந்திர மனிதனை அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் . பிரியாவும் காதலுக்காக கொஞ்சம் போராடிப்பார்த்து விட்டு அந்த இயந்திர மனிதனை மணந்து கொண்டு ஜெர்மனியில் செட்டில் ஆகி விட்டாள்.
பிரியா இறந்த செய்தி மின்னஞ்சலாக வந்த அன்று துக்கம் தாளாமல் 2 வோட்கா மாத்திரைகளை முழுங்கி போதையில் நினைவு தெரியாமல் அறையில் மயங்கி கிடந்தேன். இறப்பதற்கு முன் பிரியா தன்னுடைய இயந்திர பிரதியான V2 பிரியாவை உருவாக்கி விட்டு தான் இறந்திருக்கிறாள் என்று எனக்கு தெரியாது.
–oO0–
உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது. உள்ளங்கையை விரித்தேன் அதில் இருந்த தொடுதிரை கணினி உயிர் பெற்று வணக்கம் சொன்னது. சிங்கப்பூரின் விசா அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு பேசினேன், எதிர்முனையில் இயந்திரப்பெண் தன் பெயரை வின்சி என கூறி, விசா அனுமதி எண் என் கணினிக்கு அனுப்பப்பட்டது என்றாள் , இணைப்பை துண்டித்த அடுத்த நிமிடம் அனுமதி எண் உள்ளங்கை தொடுதிரையில் பளிச்சிட்டது.
மிக்கியிடம் ஒரு வாரத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு அறைக்கு ஓடி வந்தேன். Mr.முகில் நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் எனவே V58 & SP1799 மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் என நீட்டினாள். எனக்கு தேவையில்லை என்று கொஞ்சம் கோபமாகவே மிக்கியிடம் சொல்லிவிட்டு அறைக்கு வந்தேன். மிக்கிக்கு என் மீது காதல் அவளும் தன்னுடைய காதலை பல நடவடிக்கைகளில் நாசுக்காக என்னிடம் சொல்லி விட்டாள் , ஆனால் எனக்கு தான் இயந்திர பெண்ணை காதலிப்பது ஒரு மாதிரி இருக்கிறது. மிக்கி கொடுத்த மருந்துகளை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவளை திட்டி விட்டேன் , பாவம் மிக்கி அவளும் ஒரு இயந்திரப்பெண் தானே அவளிடம் அப்படி கடுமையான வார்த்தைகளை சொல்லியிருக்க கூடாது என்றது உள்மனம்.
அறையில் , மௌலியின் விட்டு ARRIVAL எண்ணை அழுத்திய அடுத்த நிமிடம் மௌலியின் வீட்டுள் இருந்த வெளிப்பட்டேன். மௌலியில் காதலி லிச்சி தான் என்னை வரவேற்றாள்.மாடியில் எனக்காக மௌலி காத்திருப்பதாக சொன்னாள்.மாடி அறைக்கு சென்றதும் கதைவை இழுத்து சாத்திக்கொண்டான் மௌலி.
முகில் இன்னைக்கு நான் V2 பிரியாவை “சர்வேதேச பன்னாட்டு மனித உரிமைகள் கருத்தரங்கில் சந்தித்தேன் ” அவளுக்கு என்னை யார் என்று தெரியவில்லை, உங்களுடைய கல்லுரி நண்பன் சங்கரின் நண்பன் நான் எனவும் அவளை ஒரு முறை கல்லுரியில் சங்கருடன் சந்தித்திருப்தாகவும் கூறினேன். அவளும் சங்கரை நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டாள் . நிச்சயமாக நானும் நீயும் பள்ளிகூட நண்பர்கள் என்று அவளுக்கு தெரியாது என்றான் .
அவளிடம் அவளின் அடையாள என்னை வாங்கினாயா என்றேன் ஆமாம் என்று தலையசைத்த படி தன் உள்ளங்கை தொடு திரையை காட்டினான். அவளின் அடையாள எண் மின்னியது.
அவளுக்கு தொடர்புகொள்ள என்னுடைய உள்ளங்கை தொடு திரையை உயிர்ப்பித்தேன் , முகில் இந்த நேரத்தில் அவளை கூப்படாதே , நாம் நடு இரவை தாண்டி விட்டோம், அவள் இந்நேரம் உறங்கியிருப்பாள் என்றான். எனக்கும் அதுவே சரி எனப்பட்டது , மௌலி எனக்கு வறுத்த சிக்கன் மாத்திரைகள் இரண்டும், வோட்கா மது பான மாத்திரை ஒன்றும் கொடுத்தான் கூடவே தூக்கத்திற்கான மாத்திரை ஒன்றும்.
காலையில் நான் எழுந்ததும் 2 செய்திகள் வந்திருப்பததாக உள்ளங்கையில் இருந்த கணினி காட்டியது. மிக்கிதான் அனுப்பியிருந்தாள். சிங்கப்பூரில் கால நிலை 19 டிகிரிக்கும் மேல இருப்பதால் குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் படி எழுதி இருந்தாள் , கடைசி வரியில் I Miss U முகில் என்றதும் காணப்பட்டது. காலையில் நான் எழுந்து கொள்வதற்கு முன்பாகவே V2பிரியாவுடன் பேசி போஸ்டன் பார்க்கிற்கு வர சொல்லியிருந்தான் மௌலி ,முகில் இன்னும் 5 நிமிடத்தில் V2பிரியா உனக்காக போஸ்டன் பார்க்கில் காத்திருப்பாள் என்றான் . காலை கடன்களை முடிப்பதற்கான மாத்திரைகளை முழுங்கினேன். 4 நிமிடத்தில் அனைத்தும் முடிந்ததாக தொடுதிரை கணினி காட்டியது.
அவசர அவசரமாக மௌலியில் வீட்டு DEPATURE அறைக்கு வந்தேன் . போஸ்டன் பார்க்கின் ARRIVAL அறையின் எண்ணை தட்டிய அடுத்த நிமிடம் போஸ்டன் பார்க்கில் இருந்தேன்.
அவள் என்னை விட்டு 32 டிகிரி வட கோணத்தில் உட்காந்திருப்பதாகவும் அவளின் முதுபுற திசையில் 45 மீட்டர்கள் தள்ளி நான் இருப்பதாகவும் என் உள்ளங்கை தொடு திரை கணினி காட்டியது.
அவளிடம் மெல்ல நெருங்கி சென்றேன், அவளுக்கும் எனக்கும் ஒரு 10 மீட்டர் இடைவெளி இருக்கும் சமயத்தில் அவள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
Mr . மௌலி என்னுடைய தகவல் சேமிப்பு அறையில் உங்களை பற்றிய தரவுகள் காணக்கிடைக்கவில்லை. நான் பிரியா இல்லை அவள் இறந்து இன்றோடு ஐந்து வருடம் 64 நாட்கள் ஆகின்றது நான் அவளால் உருவாக்கப்பட்ட அவளில் இயந்திர பிரதி . நான் பிரியா V2 . உங்களை பற்றிய தரவுகள் எனக்கு programm செய்யப்படவில்லை என்றாலும் உங்களுக்கு பிரியாவை பற்றி எதாவது தெரிந்திருக்கலாம் என்பதால் இங்கு வந்தேன் . நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை விட 30 நொடிகள் தாமதமாகி விட்டது, நீங்கள் இங்கு வராதது என்னை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. என்னுடைய தலைமை கட்டுப்பாட்டு அறை இங்கு வந்ததற்கான காரணத்தையும் அறிக்கையும் சமர்பிக்க சொல்கிறது . நீங்கள் எப்போது இங்கு வர முடியும் என கேட்டுக்கொண்டிருந்தாள்.
—oO0–
நான் மெதுவாக இன்னும் அவளருகிள் சென்று பிரியா என்றேன் . சட்டென்று என்னை திரும்பி பார்த்தாள். அச்சு அசலாய் என்னுடைய பிரியாவை போலவே , அதே பிரமிக்க வைக்கும் அழகு,கிறங்கடிக்கும் கண்கள் , நவநாகரீக உடை அணிந்திருந்தாள்.
என்னை கண்டதும் அவளின் கணிப்பொறி கட்டுப்பாட்டு அறை என்னை அடையாளம் கண்டு கொண்டது போலும். நொடிகளில் அழுக தொடங்கினாள். என்ன செய்வது என தெரியாமல் விக்கித்து நின்றேன் .அவள் கையை எடுத்து என் கையில் வைத்துக்கொள்ளவேண்டும் போல தோன்றியது. என்னை மிகவும் வருத்திற்குள்ளாக்குவது அவளின் அழுகை மட்டுமே. சிறிது நேர அழுகைக்கு பின் என் கையை பிடித்து அருகில் உட்கார சொன்னாள், எப்படி இருக்க முகில் என்றாள், என்னை அவள் மீது பித்து பிடிக்க வைத்த அதே குரல். , நல்லாயிருக்க பிரியா., நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்கும் முன்பாக எனக்கும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது.
அவளை பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள்,அவளுக்கு பிடித்த சாக்கலேட்டின் மாத்திரையை அவளிடம் கொடுத்தேன், வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள்,என்னுடைய கையை எடுத்து அவளின் கைக்கு நடுவே வைத்துக்கொண்டாள்.
அவளை கல்லூரிக் காலங்களில் திட்டியதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு 2 மணிக்கு என்னை பார்த்தே ஆகவேண்டும் என்று ஒருமுறை அடம்பிடித்தற்காக திட்டினதை நினைவு கொண்டு அதற்கு என்னை மன்னிப்பாயா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இன்னும் எது எதற்கோ தோன்றிய அனைத்திற்கும்.என் கையை பிடித்துக்கொண்டு சோகமே உருவாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
முகில் நான் உன்னை புரிந்து கொண்டதே என் திருமணதிற்கு முன்று மாதங்ககுக்கு முன்பு தான். எனக்காக என்னவெல்லாம் செய்தாய் நீ, எத்தனை அன்பு வைத்திருந்தாய், உனக்காக நான் இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.உன்னை தனியே தவிக்கவிட்டு போய் விட்டேன், உன்னை எத்தனை முறை அழ வைத்திருப்பேன் என்னை மன்னித்து விடு என ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். உன்னுடைய வெது வெதுப்பான கைகளில் பூனை குட்டியாக உணர்த்த நாட்கள் அவை இன்னும் நினைவிருக்கிறது என்றாள்.
தனக்கு செய்யப்பட ப்ரோக்ராம்- ல் பாதிக்கும் மேல் என்னை பற்றிய நியாபகங்களும் தரவுகளும் இருக்கின்றன என்ற படியே உன்னுடைய அடையான எண்ணை கொடு அனைத்தையும் உன்னுடைய நினைவு தளத்தில் Upload செய்கிறேன் என்றபடி அடையாள எண்ணை பெற்று என்னுடைய நினைவுகள் சேமிக்கும் அறையில் Upload செய்தாள்.
உள்ளங்கையில் இருந்த தொடு திரை மானிட்டரில் அவற்றை பார்தேன். எத்தனை எத்தனை நினைவுகள் என்னை பற்றி, அவளை முதல் முறை மஞ்சள் உடையில் கல்லூரியில் பார்த்தது தொடங்கி நிறைய நினைவுகளை Upload செய்திருந்தாள்.
என்னை பற்றிய நினைவுகளும் உன்னிடம் இருக்குமல்லவா அவற்றை எனக்கு அனுப்பு நான் அவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றாள். நானும் அவளுடைய நினைவுகள் சேமிக்கும் அறையில் அவளை பற்றிய நினைவுகளை Upload செய்யத்தொடங்கினேன் .
நான் upload செய்ய செய்யவே ஒவ்வொன்றாக படித்து படித்து குதூகளித்தாள். என் தோளில் சாய்ந்தபடி என் கையை இறுக பற்றிக்கொண்டு அவளின் உள்ளங்கை மானிட்டரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்
முகில் நீ கடைசியாக பிரியாவிடம் , எதை கேட்டாய் அதற்கான தரவுகள் எனக்கு நெறிப்படுத்தபடவில்லை, அதை நான் நிறைவேற்ற வேண்டும் என என்னுடைய கட்டுப்பாட்டு செயலகம் எனக்கு தகவல் தெரிவிக்கிறது. அதை நீ சொல்லுவயானால் நிச்சயம் நிறைவேற்றுகிறேன் என்றாள்.
கடைசியாக உன்னிடம் ஒரே ஒரு முறை I Love U சொல்லு என கேட்டேன் ஆனால் அதை கூட சொல்லாமல் நீ இணைப்பை துண்டித்து விட்டாய் என்றேன் .
பிரியா என் சட்டை காலரை பிடித்து அவளின் மூச்சுக்காற்று என் முகத்தில் படும்படி i love u சொல்வது போலவே, மெதுவாக என் சட்டை காலரை தன்னருகே இழுத்து அவளின் மூச்சுக்காற்று என் முகத்தில் பட I Love U டா என்றாள்.
என்னுடைய உள்ளங்கை தொடுதிரை கணினி சிவப்பு நிறத்தில் மினுக் மினுக் என மின்னியது.
Mr.V2முகில் உங்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்பட்டது, இந்த உலகில் இருந்து உங்களின் எந்திர உடலுக்கு விடைகொடுக்கிறோம் என்று காட்டி அணைந்தது.
தான் இறந்து விட்டதாக முகிலை நம்ப வைத்து விட்டால் முகில் தன்னை முழுதுமாக மறந்து விடுவான் என நினைத்து பொய்யாக மின்னஞ்சல் அனுப்பிய பிரியாவுக்கு, அவள் இறந்ததாக மின்னஞ்சல் வந்த அன்று இரவே முகில் தற்கொலை செய்து கொண்டது தெரியாது.
என்னை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தாள் .பச்சை நிற திரவம் என்னுடைய தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. என்னுடைய இயந்திர உடல் சிறிது சிறிதாக சிதைவடைய ஆரம்பித்தது.அப்போது தான் அவளுக்கு நான் V2முகில் என கொஞ்சம் கொஞ்சமாக புரியதொடங்கியது. தலையில் அடித்தபடி கதறி அழுக தொடங்கினாள் உண்மையான பிரியா.
–oO0–
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



















அருமையான கான்செப்ட்.
அருமையான கதை…
//Mr.முகில் நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் எனவே V58 & SP1799 மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் என நீட்டினாள்//
SP1799 – இந்த மருந்து பேரை சொன்னதும் லேசா பொறி தட்டியது..( SP –சர்வீஸ் பேக்கா?)
//தான் இறந்து விட்டதாக முகிலை நம்ப வைத்து விட்டால் முகில் தன்னை முழுதுமாக மறந்து விடுவான் என நினைத்து பொய்யாக மின்னஞ்சல் அனுப்பிய பிரியாவுக்கு, அவள் இறந்ததாக மின்னஞ்சல் வந்த அன்று இரவே முகில் தற்கொலை செய்து கொண்டது தெரியாது//
இங்கதான் கொஞ்சம் சினிமா போல ஆகிடுச்சு…
பின்னுட்டதிர்க்கு நன்றிங்க மாரி.
கதையை முடித்து ஆகவேண்டுமே அதுதான் அந்த சினிமாத்தனம்
SP-service pack –> மென் பொருளாளர்ன்னு நிருபிக்கறீங்க
தொடர்கதையாக வரவேண்டியது.
சிறுகதையாக தர நீங்கள் சிரமப்பட்டதை
உணரமுடிகிறது.
ரொம்ப நாளாச்சு, அறிவியல் புனைவுக்கதை
படிச்சி, எனக்கு.
Nice
//தொடர்கதையாக வரவேண்டியது.
சிறுகதையாக தர நீங்கள் சிரமப்பட்டதை
உணரமுடிகிறது.//
ஆமாங்க கதையை இன்னும் விவரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இரண்டு பாகமாக போடலாம் என்று கூட தோன்றியது. கடைசியில் சிரமப்பட்டு சுருக்கி விட்டேன். நுண்ணிய அவதானிப்புங்க சௌந்தர்.நன்றிங்க பின்னுட்டத்திற்கு
A Fantastic Futuristic Fantasy,
I’ve enjoyed a lot da thambi
Thanks anna. thanks for your reading and comments
A Fantastic Futuristic Fantasy
I’ve enjoyed and loved it, Wonderful
Excellent Imagination, story, climax and narration…..
Thanks for your feedback kaali
An interesting story
really superb one
Keep it up sir
Thanks for the comment Ramesh.
ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க!
இந்த கதை எழுதியது அடலேறுv2 வா!?
ஹ ஹ ஹா சரியா சொன்னீங்க வால்
If this will happen in future, I will also crate my Sat V2 in future as I expected!
Good man, I cant believe it you are litrecy knowledge has improved this much..
Sat V2 how u know my name. nice