கருஞ்சிவப்பான இரவில் தீக்கிரையாக்கினாள் மதுரையை கையில் சிலம்பு தகிக்கிறது ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள் விதை கிழிபட்டு மரிக்கின்றனர் அனைவரும் படக்கென போர்வை நீக்கியவள் விந்து வற்றிப்போன இரவில் என்னை புணர சொல்கிறாள் நானோ இப்பூமியின் கடைசி ஆண்
ஆகஸ்ட், 2010 க்கான தொகுப்பு
கடைசி ஆண்
Posted: ஆகஸ்ட் 18, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, lifeகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, புனைவு
பிறந்த நாள்
Posted: ஆகஸ்ட் 13, 2010 in Adaleru, அடலேறு, பதிவர்குறிச்சொற்கள்:Adaleru, அன்பு, பிறந்தநாள்
இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம். பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை [...]
நிலா பார்த்தல்
Posted: ஆகஸ்ட் 5, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவுகுறிச்சொற்கள்:Adaleru, கவிதை, புனைவு
சத்தம்மின்றி கசிந்து கொண்டிருந்தது இரவு, வெளியெங்கும் பெய்ய தொடங்கியது அயோடைட் மழை , ஏணியில் ஏறிகொண்டிருக்கிறான் பூமியின் கடைசி மனிதன், நாய்களற்ற தெருவில் குரைத்துக்கொண்டிருக்கின்றன எலக்ட்ரானிக் பொம்மைகள் , எடையற்று காற்றில் மிதந்து கொண்டிருக்கிறேன் நான் , “நிலவிற்கு வருக” பெயர் பலகையை துடைத்துக்கொண்டிருக்கிறாள் யாருமற்ற அனாதை சிறுமி.

















