சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில் சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும் இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் முகத்தை முகத்தை பார்த்துக்கொண்டனர்.
மாதத்தின் கடைசி நாட்களில் இருந்தோம்.எனக்கு என்ன செய்வதென்றேதெரியவில்லை. அந்த அறையின் வீதியிலேயே நின்று கொண்டிருந்தேன்.பசியை விடவும் இந்த நகரத்தில் என்னுடைய இருப்பு இப்படி தான் இருக்கிறது என்பது இன்னும் வேதனைதருவதாய் இருந்தது.இப்படி தான் இந்த நகரத்தில் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறேனா என்று வருந்தினேன்.நீண்ட பின்னிரவில் தனியாக அதே சாலையில் நின்று கொண்டிருந்தேன்.
சென்னையின் மீது வெருப்பு வந்தது.ஒரு நண்பன் கூட இல்லையா பசிக்கும் போது சாப்பாடு வாங்கித்தர என்று நினைக்கும் போது என்மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது.பசியுடன் நீண்டதூரம் நடந்திருப்பேன்.பசி மறைந்து கால் வலிக்க ஆரம்பித்ததும் அறைக்கு வந்தேன். நண்பர்கள் அனைவரும் உறங்கியிருந்தனர். நகரத்தை பற்றிய பயம் கவ்விக்கொண்டது .உறங்கிப்போனேன்.
நேற்று ஈரோடில் நடந்த சங்கமம் வலை பதிவர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். கொங்கு தேசம் விருந்தோம்பலுக்கு சிறந்தது என்பதை மீண்டும் நினைவுபடுத்தியது.அத்தனை அழகான மனிதர்கள், வரவேற்பில் ஒரு சிறுமி கையெழுத்து வாங்கிக்கொண்டு வெல்கம் என்று சொல்லி வரவேற்றாள்.அந்த கணம் தொடங்கி மிக நெருக்கமாக உணர்ந்தேன்.பாமரன், அருண், ஓசை செல்லா , PIT வலைகுழும நண்பர்கள் இன்னும் சில நண்பர்களும் பேசினர்.
மதிய உணவு, நீண்ட நாட்களுக்கு பிறகு நான் சாப்பிட்ட எங்கள் ஊரின் மிக சுவையான உணவு இதுவாகத்தான் இருக்கும்.அத்தனை வகைகளையும் நேர்த்தியுடன் செய்திருந்தனர்.சாப்பிடும் போது திடிரென சென்னையின் ஆரம்ப நாட்கள் நினைவிற்கு வந்தது. நண்பர்கள் நிறைய பேரை இன்று தான் நேரில் சந்தித்தேன். ஆனால் இத்தனை அன்பா என்று பொறாமையாக இருந்தது.ஜாக்கி திடிரென வந்தார். பேச ஆரம்பித்தோம்., சென்னையின் வெறுமை தன்னை ஈரோடு நோக்கிவரவைத்ததாக சொன்னார்.சிரித்துக்கொண்டேன். சென்னையில் பதிவர் சந்திப்பு வழக்காமாக ஒரு தேனிருடன் நினைவு பெறும். ஆனால் ஒரு பதிவர் சந்திப்பில் இருக்கை, தொழில்நுட்ப சாதனங்கள், இடம் , உணவு, புத்தகம், பேனா,பதிவர்கள் என அனைத்தையும் ஒருங்கினைப்பது எத்தனை பெரிய விஷயம் , எதற்காக இவர்கள் இப்படி வலிந்து வந்து நம்மை வரவேற்கிறார்கள், இத்தனை பிரம்பாண்ட வரவேற்பு, அறை, உணவு என அனைத்தையும் இவர்கள் ஒருங்கிணைத்து எதற்காக என்ற கேள்விகளை நீண்ட நேரமாக எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருந்தேன். அன்பு என்ற மூன்று எழுத்தில் பதில் தந்துவிடலாம் என்றும் தோன்றியது.



















சங்கமம் நிகழ்ச்சியை நினைத்து பெருமையாய் இருக்கிறது; பகிர்வுக்கு மிக்க நன்றி!
உங்கள் புத்தகத்தை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது பழமை பேசி. புத்தகம் படித்து விட்டேன். மிக நெருக்கமாக உணர்ந்தேன். வாழ்த்துக்கள்
தங்கள் ஈரோடு வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
நன்றிங்க வேலு. சங்கமம் ஒரு பிரம்பிப்பு. இதனை சாத்தியமாக்கிய அத்தனைபேருக்கும் என் நன்றிகள் மற்றும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
// I feel richer, richer by few more friends who I can say are “Friends for Life”// Wow very nice one.
Thank you SK
பகிர்ந்தமைக்கு நன்றிங்க. விழா நிகழ்வில், பரபரப்பில் உங்களோடு கலந்துரையாட இயலாமல் போனது எனக்கு வருத்தமே. விரைவில் சந்திப்போம். வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
நன்றிங்க ஆரூரன் கண்டிப்பாக சந்திப்போம்.
மிக அருமையான பகிர்வுங்க சதீஷ்
நன்றி
பின்னூட்டத்திற்கு நன்றிங்க கதிர்