பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூடவே பயணிக்கிறது உன் பட்டு தாவணியும் ஊடுருவும் பார்வையும் சுற்றம் பார்த்து நீ தரும் திருட்டு முத்தமென -0O0- உன்னுடைய நீலமும் வெள்ளையும் கலந்த தாவணியில் உள்ள ஜரிகை பானை அது தான் உசத்தி என பெருமை பேசி திரிகிறது பொங்கல் பானைகளிடம் -0O0- சந்தையில் நீ ஒரே ஒரு பானையை எடுத்துக்கொண்டு மற்றவைகளை நிராகரித்தது அவமானத்தின் உச்சமாம். குறைபட்டுக்கொள்கிறது அழகான பானைகள் -0O0- டேய் அதென்னமோ முத்தப் பொங்கலாம் அப்படின்னா [...]

















