பொங்கலுக்கு ஊருக்கு
வரும் போது
கூடவே பயணிக்கிறது
உன் பட்டு தாவணியும்
ஊடுருவும் பார்வையும்
சுற்றம் பார்த்து நீ
தரும் திருட்டு முத்தமென
-0O0-
உன்னுடைய
நீலமும் வெள்ளையும் கலந்த
தாவணியில் உள்ள
ஜரிகை பானை
அது தான் உசத்தி என
பெருமை பேசி திரிகிறது
பொங்கல் பானைகளிடம்
-0O0-
சந்தையில் நீ ஒரே
ஒரு பானையை
எடுத்துக்கொண்டு
மற்றவைகளை
நிராகரித்தது
அவமானத்தின் உச்சமாம்.
குறைபட்டுக்கொள்கிறது
அழகான பானைகள்
-0O0-
டேய் அதென்னமோ
முத்தப் பொங்கலாம்
அப்படின்னா என்ன ?
என்று உதட்டை
ஈரப்படுத்தியபடியே கேட்கிறாய்
போடி!! வெட்கம் பிடுங்கிதின்கிறது
-0O0-
என்னால கடிக்க முடிலடா
நீயே கடிச்சு கொடு என
நீ கொடுத்த கரும்பு
என்னிடம் வந்ததும்
சொல்லியது
ஆனாலும் இத்தனை
சுவை இருக்கக்கூடாது
உன் காதலியின்
எச்சிலுக்கு என்று
-0O0-
சென்ற பொங்கலுக்கு
மாடுகள் இல்லாத்தால்
ஒரு பூனையை நீ
குளிப்பாட்டியதை
நினைத்து இன்னமும்
சிரித்துக்கொள்கிறேன்
-0O0-
புத்தாண்டு பிறந்ததும்
அய் புத்தாண்டு பிறந்தது
புத்தாண்டு பிறந்தது
என்று துள்ளி குதித்தாய் நீ
அப்போது தான் தோன்றியது
நீ பிறந்தநாளன்று
அய் தேவதை பிறந்துவிட்டாள்
தேவதை பிறந்துவிட்டாள்
என்று துள்ளிக்குதித்திருக்கும்
அந்த நாளும்
-0O0-
சென்ற பொங்கலுக்கு
வாழ்த்து சொல்லி பின்
முத்தமிட்டாயே
அப்போதே
நினைக்க துவங்கிவிட்டேன்
இந்த பொங்கலை
-0O0-
தமிழ் புத்தாண்டை
எப்படி வரவேற்பது
என்றேன்
முத்தம் கொடுத்துத்தான் என்றாய்
புத்தாண்டுக்கா என்றதற்கு
இல்லை எனக்கு தான் என
மூன்று முத்தம் வாங்கிச்சென்றவள் நீ
-0O0-
அதென்னடி கணக்கு
ஒரு கரும்பில்
எத்தணை கணுக்கள்
இருக்கிறதோ
அத்தனை முத்தம்
தரவேண்டும் என்பது
-0O0-
தூக்கிச்சொருகிய
அந்த முந்தானையை
கொஞ்சம் எடுத்துவிடு
மூச்சுவிட்டுக்கொள்கிறேன்
சிறிது நேரம்
-0O0-
சென்ற பொங்கல்
முடிந்து ஊருக்கு திரும்பும்
போது அடுத்து
பார்க்கும் வரை இதுதான்
என சொல்லி தந்த முத்தம்
நாளை உன்னை பார்க்க போகிறது
-0O0-
மெல்ல கண்மூடி ஏற்றுக்கொள்
என்று சொல்லி
நீ கொடுக்கும்
முத்தத்திற்காக தான்
கொண்டாப்படுகிறது பொங்கல்
-0O0-
நீ சாப்பிட்டு
பாதி தரும் பொங்கல்
தான்
சக்கரைப்பொங்கல்
( உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் )
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



















சக்கரைப்பொங்கல் — விளக்கம் சூப்பர்..
வாழ்த்துக்கள் அடலேறு
நன்றிங்க மாரி
கவிதைகள், பொங்கல் சரம்.
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
(சுட்டபழம் என்ன ஆனார்? )
பின்னூட்டத்திற்கு நன்றிங்க. நானும் சுட்டபழமும் உங்களை நீண்ட நாட்களுக்கு முன்பு தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் அலைபேசி என்னை எனக்கு மடலிடவும் drop2adaleru@gmail.com
kadhal pongal really super..
Thanks comment Aarthi
i like this so much and enjoyed so much. it makes me to love a girl to enjoy the married life.
Do celebrate love
aha adaleru
how did i miss this?
pongalo pongal …
lovely
kadhal pongal thigatavilai