கல்லூரியில் முதல் நாள் வகுப்பில் கிரங்கடிக்கும் பார்வையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாயே அதற்கு என்ன அர்த்தம் ? –oO0– மென் இதயம் கிழித்து குருதி புசித்து உள்ளம் தொடும் உன் பார்வை –oO0– எப்படி தயக்கமில்லாமல் கைகுலுக்கி பெயர் கேட்டாய் போடா! நான் தூங்கவேயில்லை –oO0– கரும்பலகை எழுத்துக்களை அழிக்கும் ஒவ்வொரு முறையும் அழித்துக்கொண்டுருந்தாய் என் தயக்கத்தை –oO0– எளிதாய் மயக்கி வைத்தாய் இயல்பாய் ரசிக்க வைத்தாய் என்னையே மெதுவாய் இழக்க வைத்தாய் –oO0– உன்னுடன் பேசுகையில் எதேச்சையாக [...]

















