கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுகளில் இருந்து
அவளை பிரித்து
காட்ட சொன்ன கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் தண்டனை
நிறையேற தொடங்கிய
காலையில் விழித்தெழுந்தேன்
அவள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்
தூரிகா
Posted: December 12, 2011 in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girlகுறிச்சொற்கள்:அன்பு, கவிதை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை
மறுமொழிகள்



















மனதை நெகிழ வைத்து விட்டது.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
//மெளத்திலிருந்து இசை பிரிப்பது//
புரியல … sir
தீயிலிருந்து வெம்மையையும் , மெளனத்திலிருந்து இசையையும், முரண்பட்ட இவைகளை பிரிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா செளந்தர்?
//மெளத்திலிருந்து இசை பிரிப்பது//
spelling mistake sir, konjam thiruthungkalane…
new year wishes
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா. சரி செஞ்சுட்டனே