‘அடலேறு’ பகுப்புக்கான தொகுப்பு

வெயிலானவள் நீ

Posted: April 20, 2012 in அடலேறு, கவிதை
குறிச்சொற்கள்:,

வெயில் நாட்களில் துப்பட்டாவை பின் கழுத்தில் சுற்றி தலை மூடியிருப்பாயே அதில் வடிந்து போனவன் நான் ****** வெயிலால் உருகிப்போன சாக்லேட்டை நுனி மூக்கு படர நீ சாப்பிடுவதை ரசிக்கவேணும் நீளட்டும் இந்த கோடை **** கோடையின் இந்த‌ நடுநிசி விழிப்புகள் அனைத்தும் உன்னை நினைத்துக்கொள்ளத்தான் ****** வெட்கம் விலகிய இரவில் போர்வை விலக்கி அணைத்துக்கொள் நீளட்டும் இந்த அடர் ஜாமம் ****** நீண்ட கோடை விடுமுறை முடிந்த‌ சந்திப்பில் எல்லாரும் இருக்க‌ ஓடிவந்து பின்கழுத்தனைத்து முத்தமிட்டாயே [...]

நகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு. முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே [...]

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேலே சுட்டவும் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லவும்

என் மழையானவள் நீ

Posted: நவம்பர் 14, 2011 in அடலேறு

மெல்ல தொடங்கி அடித்துப்பெய்கிறது மழை அடித்து பெய்து மெல்ல அடங்குகிறதுன் ஊட‌ல் **** நீயும் நனைகிறாய் என்னையும் நனைக்கிறாய் **** அடை ம‌ழை என்றாலே  இரவுப்பேருந்தில் நீ த‌ந்த‌ 164 முத்த‌ங்க‌ளை தான் நினைத்துக்கொள்கிறேன் **** ம‌ழைக்கு வேறு என்ன‌ பெருமை இருந்துவிட‌ப்போகிற‌து உன்னை ந‌னைத்த‌து த‌விர‌ **** ம‌ழையில் ந‌னைந்து விட்டு கைத‌ட்டி சிரிக்கிறாய் உன்னை ந‌னைத்து விட்டு பெய்யென‌ பெய்கிற‌து பெரும‌ழை **** அந்த‌ ம‌ழை நாளில் குடைக்க‌டியில் இட்ட‌ முத்த‌த்தில் வ‌டிந்து போன‌வ‌ன் [...]

நீங்கள் எல்லாரும் இவ்வளவு விருப்பப்படும் ஒரு டெக்னாலஜியை நிறைவேற்றுவதைவிட எனக்கு வேறு என்ன வேலை இருந்து விட போகிறது? அது என் காலத்துக்குமான‌ கடமை -‍ ஸ்டீவ் ஜாப்ஸ் Apple has lost a visionary and creative Genius, And the world has lost an amazing human being. When Can I See you Again in New Product Release with Black T-Shirt, I Will Badly Miss [...]

அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,

நூற்றாண்டின் வலியை அனுபவித்துவிட்டாள் அவள் உதிர்வ‌த‌ற்கு த‌யாராய் திர‌ண்டிருக்கிறது வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌ நுழைகிறாள் தனி அறையில் அவ‌ளின் பேரிரைச்சல் க‌ண்டு ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து அமைதியின் க‌டைசி சொல் நீரால் சூழ்ந்த வீடு உடைவது கண்டு வீறிட்டு அழுகிறாய் நீ வெளிச்ச‌ம் க‌ண்டால் ந‌டுங்குகிற‌து உன்னுடல் இனி உன் த‌லை பிடித்திழுக்கும் கைக‌ளை கொண்டு மெல்ல‌ வெளியேற‌லாம் நீ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் If you enjoyed this post, make sure [...]

பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூடவே பயணிக்கிறது உன் பட்டு தாவணியும் ஊடுருவும் பார்வையும் சுற்றம் பார்த்து நீ தரும் திருட்டு முத்தமென‌ -0O0- உன்னுடைய‌ நீலமும் வெள்ளையும் கலந்த தாவ‌ணியில் உள்ள ஜரிகை பானை அது தான் உச‌த்தி என‌ பெருமை பேசி திரிகிற‌து பொங்கல் பானைக‌ளிட‌ம் -0O0- சந்தையில் நீ ஒரே ஒரு பானையை எடுத்துக்கொண்டு மற்றவைகளை நிராகரித்தது அவமானத்தின் உச்சமாம். குறைப‌ட்டுக்கொள்கிற‌து அழகான பானைகள் -0O0- டேய் அதென்ன‌மோ முத்தப் பொங்க‌லாம் அப்ப‌டின்னா [...]

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]