கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுகளில் இருந்து அவளை பிரித்து காட்ட சொன்ன கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் தண்டனை நிறையேற தொடங்கிய காலையில் விழித்தெழுந்தேன் அவள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்
‘அனுபவம்’ பகுப்புக்கான தொகுப்பு
தூரிகா
Posted: December 12, 2011 in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girlகுறிச்சொற்கள்:அன்பு, கவிதை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை
மழை நான் மற்றும் உறுபசி சம்பத்
Posted: December 7, 2010 in அடலேறு, அனுபவம், எஸ்.ரா, தமிழ், நினைவு, புத்தகம், வாழ்த்துகுறிச்சொற்கள்:அடலேறு, அனுபவம், புதினம், வாழ்க்கை
சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக ஜன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு படிக்கலாம் என வரட்டீ ( பால் கலக்காத [...]
யட்சி
Posted: மார்ச் 12, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், சந்திப்பு, தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், மொழி, வாழ்க்கை, life style, love, poem, sad, thanks
இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]
மரணம்
Posted: மார்ச் 7, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பொது, வாழ்க்கை, வாழ்த்து, Girl, Imaginationகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து, life style, love, poem, sad
உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்
நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்
Posted: பெப்ரவரி 3, 2010 in Adaleru, அனுபவம், சந்திப்பு, நட்சத்திரப் பதிவு, நளினி ஜமீலா, நினைவு, பேட்டி, Girl, life, Nalini Jameelaகுறிச்சொற்கள்:அனுபவம், சுழி மாற்று இலக்கிய களம், நளினி ஜமீலா, நினைவு, பாலியல், பாலியல் தொழிலாளி, பெண், பேட்டி, பொள்ளாச்சி, Nalini Jameela, Pollachi
கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]
ஆகச்சில நிமிடங்கள்
Posted: ஜனவரி 25, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நட்பு, நினைவு, பள்ளி, புனைவு, பொது, Imagination, life, love, school daysகுறிச்சொற்கள்:Adaleru, அன்பு, சிறுகதை, சிறுவன், பள்ளிக்கூடம், பள்ளிப்பருவம், புனைவு, வாழ்க்கை, life style, love
1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் [...]
நூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
Posted: ஜனவரி 5, 2010 in அனுபவம், காதல், சிறுகதை, தமிழ், பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Book review, Girl, Imagination, lifeகுறிச்சொற்கள்:அனுபவம், இலக்கியம், காதல் புதினம், தமிழ், நிலா ரசிகன், நூல் விமர்சனம், புனைவு, விருது, Book review, Nila Rasigan
——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]
புத்தக வெளியீடு
Posted: December 17, 2009 in Award, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Friendship, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:அனுபவம், அன்பு, அறிவிப்பு, உருவகம், கவிதை, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, பெண், மொழி, வாழ்க்கை, வாழ்த்து, விருது, Friendship, life style, love, poem
அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“ மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]
தலைச்சுமை – நூல் விமர்சனம்
Posted: December 14, 2009 in Award, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், தமிழ், வாழ்க்கை, Book review, Girl, life, loveகுறிச்சொற்கள்:கவிதை, தமிழ், நாவல், நூல் விமர்சனம், பெண், வட்டார நாவல், வாழ்த்து
——————————– நூலின் பெயர் : தலைச்சுமை வெளியீடு : நிவேதிதா பதிப்பகம் விலை : ரூ.55 பக்கம்: 144 நூலாசிரியர் : பழமன் ——————————— வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த [...]
விடுவித்துக்கொள்ளும் யட்சி
Posted: December 8, 2009 in அனுபவம், கவிதை, காதல், தமிழ், நினைவு, Girl, love, scribblingsகுறிச்சொற்கள்:அன்பு, உருவகம், காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, மொழி, யட்சி, வாழ்க்கை
உன் கடுமையான சொற்களின் மீட்டெடுக்க முடியாத வார்த்தை கணங்களை தாங்கவியலாத பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விடுவித்துக்கொள்கிறாய் முழுதுமாய் வெளியேறும் முன் நிச்சயம் தரவேண்டும் உனக்கான முத்தமும் வெளியேறிய ப்ரதேசத்தின் ரத்தக்கறைகளும். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

















