‘தமிழ்’ பகுப்புக்கான தொகுப்பு

புகைப்படம்

Posted: ஜனவரி 22, 2011 in கவிதை, தமிழ், வாழ்க்கை
குறிச்சொற்கள்:,

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம் என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் [...]

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ [...]

அழகான கொலு பொம்மைகளை பார்த்து கை தட்டி குதுகலிக்கிறாய் நீ உன்னை ஏன் கொலுவில் வைக்கவில்லை என்று குழம்பிப்போகின்றன பொம்மைகள் –0@0– நவராத்திரி கொலுவில் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களாம். பிறகு உன்னை எப்படி விட்டு வைத்தாள் ஜான‌கி ஆண்டி –0@0– ந‌வாராத்திரி என்றாலே திருவிழாவும்,சுண்டலும். சுண்டல் என்றாலே கொலுவும்,பொம்மைக‌ளும். மொம்மைக‌ள் என்றாலே நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி சுடிதாரும் தான் வ‌ந்து நிற்கிற‌தென் ம‌ன‌தில் –0@0– தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌ கொலுவில் அழ‌கான பொம்மையை அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால் [...]

கனவுகளால் ஆனவளை  வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த ‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]

வார்த்தைகளால் ஆனவளை இன்று பேருந்தில் சந்திதேன் வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது அவள் உடம்பு. கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் என்று எழுதியிருந்தது காது மூக்கு என அனைத்திற்கும் அப்படியே விகாரமில்லாமல் அழகாகவே இருந்தாள் நீ யார் என்றதற்கு மெல்லிய புன்னகை ததும்பியவளாக வாய் திறந்தாள். வார்த்தைகள் ஒவ்வொன்றாக‌ கீழே விழுந்தது விழுந்த வார்த்தையை பொறுக்கி சட்டைபைக்குள் போட்டுக்கொண்டேன் சட்டைபை நிரம்ப‌ நிரம்ப‌ பேசினாள் அப்படி நிரப்பப்பட்ட வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டது தான்  இந்த கவிதை -அடலேறு [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

  நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]