‘நட்பு’ பகுப்புக்கான தொகுப்பு

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]

பள்ளி முடிந்து வரும் மாலை  நேரங்களில் எனக்கான நொறுக்குத்தீனி எடுத்து வைப்பாயே அதற்காகவேனும் எனக்கான தட்டு கழுவியும் சட்டை தேய்தும் பின் நவீனத்துவ அன்பு காட்டுவாயே அதற்காகவேனும் எங்க அண்ணா பின்னிவிடற ஜடையே அழகு தான் என செல்வியிடம் சொல்லி  சிரிப்பாயே அதற்காகவேனும் கோபத்தின் உச்சத்தில் போடா கழுதை என சொல்லிவிட்டு வேகமாய் வாசல் பக்கம் ஒடிப்போவாயே அதற்காகவேனும் அதிகாலை தூக்க பொழுதுகளை காதுக்குள் மையிலிறகு நுழைத்து எழுப்புவாயே அதற்காகவேனும் அத்திலிச்சி பூனைக்கு வயிறு வலிக்கிறதென விக்ஸ் [...]

தொலைந்து போன நண்பனொருவனை ’லிபர்டி’ நிறுத்ததில் பார்க்க நேர்ந்தது ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவில் கடைசியாய் சேர்ந்தவன் அவன் என்று சொல்லிமுடிக்கையில் கட்டிக்கொண்டான் லலிதமாக சென்னை வந்து இருபத்தியோரு வருடம் ஆனதாகவும் பெயர் தெரியாத நிறுவனமொன்றில் காரியதரிசியாக இருப்பதாகவும் சொல்ல தொடங்கையில் தொடங்கி போனது பெரு மழை ஒன்று அவசரமாக விடை பெற்று சென்றவனின் பின் பக்கம் பார்த்தேன், அதே படிந்து வாரிய முடி, சற்றே பெருத்த உடல் வாகு, மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை [...]

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள். இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் , புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும், புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.