‘நினைவு’ பகுப்புக்கான தொகுப்பு

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

  பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும்  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த [...]

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ [...]

               வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது . நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் [...]

எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர். மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்