‘பதிவர்’ பகுப்புக்கான தொகுப்பு

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]

பிறந்த நாள்

Posted: ஆகஸ்ட் 13, 2010 in Adaleru, அடலேறு, பதிவர்
குறிச்சொற்கள்:, ,

இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல  பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம். பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை [...]

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர். மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு [...]

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம். அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள். சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30 இடம் : Discovery Book Palace No. [...]