‘பிரிவு’ பகுப்புக்கான தொகுப்பு

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

எப்போதும் கவிதைகளை இரவிலேயே ஏன் பிடிக்கிறாய் என்றால் தூரிகா. இரவுகளில் தான் அலைந்து கொண்டிருக்கின்றன தனித்து விடப்பட்ட வார்த்தைகள் என்றேன். தூரத்தில் அகால ஓலமிட்டு கொண்டிருந்த பறவையின் சிறகில் மென் முத்தமிட்டு பறக்கவிட்டாள், அது நிராகரிப்பின் வார்த்தைகளை உதிர்த்தபடியே சென்றது முடிவற்ற நீண்ட இரவில். -0O0- வெறுமையால் நிரம்பிய வார்த்தையில் இருந்து ஒரு துளி எடுத்து வந்தேன் துளி கடலென உருப்பெற்றது, அதை மெல்லிய கரங்களில் ஏந்தி தன்னுடனே வைத்துக்கொண்டாள் தூரிகா துளி விலங்கென உருப்பெற்று அவளுடன் [...]

எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே

  நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை