பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]
‘பொது’ பகுப்புக்கான தொகுப்பு
எனதன்பின் பூவிதழ்
Posted: April 28, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, பள்ளி, புனைவு, பெண், பொது, வாழ்த்து, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், பேச்சிலர், மொழி, life style, love, poem, sad
மூன்று முத்தம் தருபவள்
Posted: மார்ச் 17, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பள்ளி, புனைவு, பொது, முத்தம், வாழ்க்கை, Girl, Imagination, Kiss, life, love, school daysகுறிச்சொற்கள்:உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், தமிழ், நினைவு, பெண், பேச்சிலர், மொழி, வாழ்த்து, life style, love, poem
ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]
மரணம்
Posted: மார்ச் 7, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பொது, வாழ்க்கை, வாழ்த்து, Girl, Imaginationகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து, life style, love, poem, sad
உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்
ஆகச்சில நிமிடங்கள்
Posted: ஜனவரி 25, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நட்பு, நினைவு, பள்ளி, புனைவு, பொது, Imagination, life, love, school daysகுறிச்சொற்கள்:Adaleru, அன்பு, சிறுகதை, சிறுவன், பள்ளிக்கூடம், பள்ளிப்பருவம், புனைவு, வாழ்க்கை, life style, love
1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் [...]
மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
Posted: நவம்பர் 30, 2009 in Adaleru, அடலேறு, சிறுகதை, தமிழ், பள்ளி, புனைவு, பொது, வலை பக்கம், வாழ்க்கை, Girl, Imagination, life, love, Meetingகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, அப்பா, பிறந்தநாள், பெண், வாழ்க்கை
முன்கதைச்சுருக்கம்: அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. [...]
முகம் தொலைத்தவன்
Posted: நவம்பர் 18, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பொது, வாழ்க்கை, Imagination, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, சோகம், புனைவு
(புதுக்கவிதை) அந்த பழுப்பு மாலையின் பேருந்து பயணத்தில் தெரியாமல் கால் பட்டதுக்காய் மூன்று முறை மன்னிப்பு கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும் படிக்காதவனாகவும் தெரிந்ததால் மனைவியின் முன் வீரம் காட்ட அனைவரும் பார்க்கையில் கடினமான வார்த்தை கொண்டு திட்டிய போது மெதுவாய் உருமாற தொடங்கி இருந்தது எனக்கான முகம் *********************** (நவீன கவிதை) வினையாலனையும் பெயரின் வாசம் முகர்ந்த இருளின் சலனத்தில் தொடங்கியது கடைசி நீட்சியின் பகல். வெம்மை தணிந்தவனின் சட்டை இழுத்து அட்சரச ஆழியின் சுக்கான் [...]
சென்னை வலை பதிவர் சந்திப்பு –07/11/09
Posted: நவம்பர் 4, 2009 in Adaleru, அறிவிப்பு, பதிவர், பதிவர் சந்திப்பு, பொது, வலை பக்கம், Meetingகுறிச்சொற்கள்:பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், Bloggers Meeting
இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம். அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள். சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30 இடம் : Discovery Book Palace No. [...]
நிசப்தம்=நீ+சத்தம்
Posted: நவம்பர் 4, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, பொது, வாழ்க்கைகுறிச்சொற்கள்:ஈழம், கவிதை, சோகம், தாக்கம்
நண்பனின் நிசப்த கவிதையின் லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய நிசப்த அலையொன்று என்னையும் ஆட்கொண்டது கால எந்திரத்தின் வழியே நிசப்தத்தை நிறுத்த எண்ணியபோது கடிகாரத்தின் வழியாய் புகுந்து கொண்ட நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று நிறுத்திப்போனது நிசப்தவெளியில். ஆழியெங்கும் நிசப்த அலைகள் உணர்ச்சியின் வேகத்தில் கெட்ட வார்த்தையாய் வெளியேறிய எச்சில் குமிழிகள் யாவும் நிசப்த வெளியெங்கும் சலனமற்று கரைந்த நேரத்தில் கண்டுகொள்ளாத ஏக்கத்தில் கத்தி விரைத்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழ குழந்தை நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான [...]
கடைசி பக்க கிறுக்கல்கள் -6
Posted: செப்டம்பர் 18, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், பொது, மொக்கை, Imagination, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, காதல், கிறுக்கல், புனைவு, பூனை
நீர் உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய் நிலம் உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி காற்று நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின் முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள் ஆகாயம் நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய [...]

















