‘வலை பக்கம்’ பகுப்புக்கான தொகுப்பு

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

கவுண்டர் காட்டுக்கு கதிரறுக்க  போனவளே மத்தியானம் ஆச்சுதே இந்த மாம(ன்) மேல நெனப்பிருக்கா உச்சி பொழுதாச்சுதே உசுரு நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு காத்திருக்க படுத்தபடியே நம்மூட்டு எறுப்புக்குதா சோறு வெக்கற போதையில அடிபட்ட காலுக்கு வருத்தப்படாத மூணே மாசத்துல சரியாகி போகுமுன்னு சொல்லிப்புட்டா மருத்துவச்சி அடிபட்ட நேரத்தவிட என்னக்காக வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி என் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]

முன்கதைச்சுருக்கம்: அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. [...]

இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம். அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள். சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30 இடம் : Discovery Book Palace No. [...]