கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுகளில் இருந்து அவளை பிரித்து காட்ட சொன்ன கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் தண்டனை நிறையேற தொடங்கிய காலையில் விழித்தெழுந்தேன் அவள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்
‘Girl’ பகுப்புக்கான தொகுப்பு
தூரிகா
Posted: December 12, 2011 in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girlகுறிச்சொற்கள்:அன்பு, கவிதை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை
வார்த்தைகளால் ஆனவள்
Posted: செப்டம்பர் 4, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், பெண், Girl, Imaginationகுறிச்சொற்கள்:அடலேறு, கவிதை, புனைவு
வார்த்தைகளால் ஆனவளை இன்று பேருந்தில் சந்திதேன் வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது அவள் உடம்பு. கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் என்று எழுதியிருந்தது காது மூக்கு என அனைத்திற்கும் அப்படியே விகாரமில்லாமல் அழகாகவே இருந்தாள் நீ யார் என்றதற்கு மெல்லிய புன்னகை ததும்பியவளாக வாய் திறந்தாள். வார்த்தைகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தது விழுந்த வார்த்தையை பொறுக்கி சட்டைபைக்குள் போட்டுக்கொண்டேன் சட்டைபை நிரம்ப நிரம்ப பேசினாள் அப்படி நிரப்பப்பட்ட வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டது தான் இந்த கவிதை -அடலேறு [...]
கடைசி ஆண்
Posted: ஆகஸ்ட் 18, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, lifeகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, புனைவு
கருஞ்சிவப்பான இரவில் தீக்கிரையாக்கினாள் மதுரையை கையில் சிலம்பு தகிக்கிறது ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள் விதை கிழிபட்டு மரிக்கின்றனர் அனைவரும் படக்கென போர்வை நீக்கியவள் விந்து வற்றிப்போன இரவில் என்னை புணர சொல்கிறாள் நானோ இப்பூமியின் கடைசி ஆண்
பிரிவின் வலி
Posted: ஜூலை 1, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, பெண், வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, கவிதை, காதல், சோகம், நினைவு, லகர தமிழச்சி, வாழ்த்து
எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]
எனதன்பின் பூவிதழ்
Posted: April 28, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, பள்ளி, புனைவு, பெண், பொது, வாழ்த்து, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், பேச்சிலர், மொழி, life style, love, poem, sad
பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]
மூன்று முத்தம் தருபவள்
Posted: மார்ச் 17, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பள்ளி, புனைவு, பொது, முத்தம், வாழ்க்கை, Girl, Imagination, Kiss, life, love, school daysகுறிச்சொற்கள்:உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், தமிழ், நினைவு, பெண், பேச்சிலர், மொழி, வாழ்த்து, life style, love, poem
ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]
யட்சி
Posted: மார்ச் 12, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், சந்திப்பு, தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், மொழி, வாழ்க்கை, life style, love, poem, sad, thanks
இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]
மரணம்
Posted: மார்ச் 7, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பொது, வாழ்க்கை, வாழ்த்து, Girl, Imaginationகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து, life style, love, poem, sad
உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்
நீண்ட முத்தம்
Posted: பெப்ரவரி 24, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், புனைவு, முத்தம், Girl, Kiss, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, கவிதை, காதல், தமிழ், புனைவு, பெண், முத்தம், love, poem
யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில் கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன நீ இருக்கும் இரவுகளின் நீட்சி நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி என்னை ஆகடியம் பண்ணுகிறது நீண்ட அமைதியில் எப்போதும் என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய் உனதன்பின் ஸ்பரிசங்களை தினசரி மதிய உணவிலும் அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும் வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில் விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம் கடைசி இரவில் நீ கொடுத்த நீண்ட முத்தமும் , எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும். If you [...]
நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்
Posted: பெப்ரவரி 3, 2010 in Adaleru, அனுபவம், சந்திப்பு, நட்சத்திரப் பதிவு, நளினி ஜமீலா, நினைவு, பேட்டி, Girl, life, Nalini Jameelaகுறிச்சொற்கள்:அனுபவம், சுழி மாற்று இலக்கிய களம், நளினி ஜமீலா, நினைவு, பாலியல், பாலியல் தொழிலாளி, பெண், பேட்டி, பொள்ளாச்சி, Nalini Jameela, Pollachi
கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]

















