‘Imagination’ பகுப்புக்கான தொகுப்பு

வார்த்தைகளால் ஆனவளை இன்று பேருந்தில் சந்திதேன் வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது அவள் உடம்பு. கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் என்று எழுதியிருந்தது காது மூக்கு என அனைத்திற்கும் அப்படியே விகாரமில்லாமல் அழகாகவே இருந்தாள் நீ யார் என்றதற்கு மெல்லிய புன்னகை ததும்பியவளாக வாய் திறந்தாள். வார்த்தைகள் ஒவ்வொன்றாக‌ கீழே விழுந்தது விழுந்த வார்த்தையை பொறுக்கி சட்டைபைக்குள் போட்டுக்கொண்டேன் சட்டைபை நிரம்ப‌ நிரம்ப‌ பேசினாள் அப்படி நிரப்பப்பட்ட வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டது தான்  இந்த கவிதை -அடலேறு [...]

எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]

கருவரையில் வெளியேறி இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது ஆதாமின் எச்சம் எல்லா உடல் விற்பவளின் டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும் எச்சத்தின் விளிம்பு நிலை. பின் மாலை பொழுதுகளில் மரணித்தவனை எழுப்பிக்கேட்டால் ஒரு வேளை தெரியலாம் பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும் கடவுளின் இரண்டாம் வருகையும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்

1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் [...]

உனக்கென படைக்கப்பட்ட இரவுகளின் தர்க்கம் நீண்டு கொண்டே செல்கிறது அழுத்தம் தாங்காமல் புரண்டு படுக்கிறேன் நவீனத்தின் நீட்சியாக எடுத்துக்கொள் நகக்கண் வழியே என் சதைப்பிண்டத்தை வெளியேறா நித்திய ஒப்பந்ததின் கையெழுத்து பிரதிகளை,ஊடலின் திறவுகோலால் மூடி ஆழியின் மையத்தில் எறிந்து விட்டுப்போ மூழ்கி, தத்தளித்து ஒதுங்கி பின் கரைசேரட்டும் நமக்கான பிரியங்களும் தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகளும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

மெல்ல கீழுதடு  கடிப்பாய் கண்களை சுருக்குவாய் நகங்களினால் பற்களை தேய்பாய் தேவையற்ற சண்டையிடுவாய் என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல் அதிகமென வாதாடுவாய் இப்படி ஏதேனும் ஒன்றில் உட்புகுந்து அன்றைக்கான கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு மெல்ல வீடு  சேர்வேன் நான் அன்றைய இரவின் கனவுக்காக If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!