‘Meeting’ பகுப்புக்கான தொகுப்பு

முன்கதைச்சுருக்கம்: அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. [...]

கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]

இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம். அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள். சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30 இடம் : Discovery Book Palace No. [...]