Posted in Adaleru, Imagination, scribblings, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பொது, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, சோகம், புனைவு on நவம்பர் 18, 2009 | 18 மறுமொழிகள் »
(புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்
***********************
(நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக முகம் தொலைத்தவனுக்கு
நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, scribblings, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem on அக்டோபர் 26, 2009 | 10 மறுமொழிகள் »
ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்
If you enjoyed this [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Award, thanks to vikadan, அடலேறு, அறிவிப்பு, தமிழ், நட்சத்திரப் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, நன்றி, விருது, thanks on அக்டோபர் 22, 2009 | 20 மறுமொழிகள் »
இன்று அடலேறு வலைபக்கம் யூத்புல் விகடனில் குட் பிளாக்(Good Blog) ஆக பக்க பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்தவர்களுக்கும், வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் அடலேறுவின் நன்றிகள்.
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், நட்பு, பள்ளி, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, கவிதை, poem on அக்டோபர் 21, 2009 | 30 மறுமொழிகள் »
தொலைந்து போன நண்பனொருவனை
’லிபர்டி’ நிறுத்ததில் பார்க்க நேர்ந்தது
ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவில்
கடைசியாய் சேர்ந்தவன் அவன்
என்று சொல்லிமுடிக்கையில்
கட்டிக்கொண்டான் லலிதமாக
சென்னை வந்து
இருபத்தியோரு வருடம்
ஆனதாகவும் பெயர் தெரியாத
நிறுவனமொன்றில்
காரியதரிசியாக இருப்பதாகவும்
சொல்ல தொடங்கையில்
தொடங்கி போனது
பெரு மழை ஒன்று
அவசரமாக விடை பெற்று
சென்றவனின் பின்
பக்கம் பார்த்தேன்,
அதே படிந்து வாரிய முடி,
சற்றே பெருத்த உடல் வாகு,
மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை
நல்ல வேலை ஏழாம் வகுப்பின்
கிழிந்த டவுசர் போடவில்லை.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Imagination, diwali, festival, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, நினைவு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், தீபாவளி, நினைவு, வாழ்த்து, diwali wishes, love, poem on அக்டோபர் 13, 2009 | 34 மறுமொழிகள் »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Girl, கவிதை, தமிழ், நினைவு, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது அடலேறு, உருவகம், புனைவு, பெண், பேச்சிலர், வாழ்க்கை on அக்டோபர் 5, 2009 | 14 மறுமொழிகள் »
படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
வழியே பெறுக்கெடுத்து ஒடுகிறது
நதியொன்று…
எங்கெல்லாமோ முடிக்கிவிடப்பட்ட நதியின் திசை
தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
எதிர் வீட்டு நாய் குட்டியாய்
பின்பு ஒரு நாள்
காலஎந்திரம் வழியே கல்லூரியின்
இரண்டாம் வருட செய்முறை தேர்வு
முடிந்து திரும்புகையில்
கண்டுபிடித்தேன் நதியை
‘நியூட்டனின் மூன்றாம் விதியில்’
அடுத்த வருடம் எழுதும்
கவிதையின் பனிரெண்டாவது
வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்
இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
கடல் சேரும் வரை நிறைய பேரால்
கண்டுபிடிக்க முடிவதில்லை
நதியின் திசையும் அதன் நோக்கமும்
If you enjoyed this post, make sure you subscribe to my [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Imagination, அடலேறு, கவிதை, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அப்பா, கடவுள், கவிதை, தமிழ், புனைவு, மொழி on செப்டம்பர் 30, 2009 | 18 மறுமொழிகள் »
.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, love, scribblings, அடலேறு, காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், வாழ்க்கை, life style, love on செப்டம்பர் 26, 2009 | 43 மறுமொழிகள் »
முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Award, Friendship, தமிழ், தொடர் பதிவு, நட்பு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அன்பு, தமிழ், வாழ்த்து, விருது on செப்டம்பர் 21, 2009 | 10 மறுமொழிகள் »
அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள்.
இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் ,
புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும்,
புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், பொது, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், கிறுக்கல், புனைவு, பூனை on செப்டம்பர் 18, 2009 | 24 மறுமொழிகள் »
நீர்
உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்
நிலம்
உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி
காற்று
நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயம்
நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் [...]
முழு பதிவையும் வாசிக்க »