பள்ளி முடிந்து வரும்
மாலை நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]
‘அண்ணா’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
அடங்காபிடாரி
Posted in Adaleru, Sister, அடலேறு, அனுபவம், கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு, நினைவு, பள்ளி, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணா, அனுபவம், அன்பு, தங்கச்சி, தமிழ், வாழ்க்கை, வாழ்த்து, life style, thanks on நவம்பர் 6, 2009 | 32 மறுமொழிகள் »
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem on ஆகஸ்ட் 11, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]
டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?
Posted in நட்பு, குறிச்சொல் இடப்பட்டது அண்ணா, அன்பு on செப்டம்பர் 26, 2008 | 39 மறுமொழிகள் »
உங்களுக்கும் உங்க அண்ணா நியாபகமா அப்ப சொல்லுங்க பின்னுட்டத்துல

















