Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘அன்பு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

முன்கதைச்சுருக்கம்:
அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற [...]

முழு பதிவையும் வாசிக்க »

பள்ளி முடிந்து வரும்
மாலை  நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி  சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]

முழு பதிவையும் வாசிக்க »

தொலைந்து போன நண்பனொருவனை
’லிபர்டி’ நிறுத்ததில் பார்க்க நேர்ந்தது
ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவில்
கடைசியாய் சேர்ந்தவன் அவன்
என்று சொல்லிமுடிக்கையில்
கட்டிக்கொண்டான் லலிதமாக
சென்னை வந்து
இருபத்தியோரு வருடம்
ஆனதாகவும் பெயர் தெரியாத
நிறுவனமொன்றில்
காரியதரிசியாக இருப்பதாகவும்
சொல்ல தொடங்கையில்
தொடங்கி போனது
பெரு மழை ஒன்று
அவசரமாக விடை பெற்று
சென்றவனின் பின்
பக்கம் பார்த்தேன்,
அதே படிந்து வாரிய முடி,
சற்றே பெருத்த உடல் வாகு,
மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை
நல்ல வேலை ஏழாம் வகுப்பின்
கிழிந்த டவுசர் போடவில்லை.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள்.

இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் ,
புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும்,
புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.

முழு பதிவையும் வாசிக்க »

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »

முழு பதிவையும் வாசிக்க »

அன்புள்ள அப்பாவிற்கு

அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த  தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில்  சைக்கிளின்  முன் bar  என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு  என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில்  நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது  நியாபகம் இருக்கிறதா? 
எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே [...]

முழு பதிவையும் வாசிக்க »

டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?

உங்களுக்கும் உங்க அண்ணா நியாபகமா அப்ப சொல்லுங்க பின்னுட்டத்துல

முழு பதிவையும் வாசிக்க »