.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத [...]
‘அப்பா’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
எதிர் கூர்தலறம்
Posted in Adaleru, Imagination, அடலேறு, கவிதை, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அப்பா, கடவுள், கவிதை, தமிழ், புனைவு, மொழி on செப்டம்பர் 30, 2009 | 18 மறுமொழிகள் »
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem on ஆகஸ்ட் 11, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]
அன்புள்ள அப்பாவிற்கு
Posted in வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது அன்பு, அப்பா on நவம்பர் 5, 2008 | 27 மறுமொழிகள் »
அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில் சைக்கிளின் முன் bar என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில் நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது நியாபகம் இருக்கிறதா?
எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே [...]

















