Posted in Adaleru, Imagination, scribblings, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பொது, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, சோகம், புனைவு on நவம்பர் 18, 2009 | 18 மறுமொழிகள் »
(புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்
***********************
(நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக முகம் தொலைத்தவனுக்கு
நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Friendship, Girl, Imagination, Meeting, life, love, scribblings, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, புனைவு, போட்டி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அனுபவம், அறிவிப்பு, இலக்கணம், கம்ப்யூட்டர், காதல் புதினம், சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி, சிறுகதை, புனைவு, பெண், பேச்சிலர், life style on நவம்பர் 12, 2009 | 69 மறுமொழிகள் »
கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில் இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, கிறுக்கல், தமிழ், நினைவு, மொழி on செப்டம்பர் 12, 2009 | 18 மறுமொழிகள் »
பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
[...]
முழு பதிவையும் வாசிக்க »