உன் கடுமையான சொற்களின்
மீட்டெடுக்க முடியாத வார்த்தை
கணங்களை தாங்கவியலாத
பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம்
கொஞ்சமாய் உன்னை
விடுவித்துக்கொள்கிறாய்
முழுதுமாய் வெளியேறும் முன்
நிச்சயம் தரவேண்டும்
உனக்கான முத்தமும்
வெளியேறிய ப்ரதேசத்தின்
ரத்தக்கறைகளும்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
‘கிறுக்கல்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
விடுவித்துக்கொள்ளும் யட்சி
Posted in Girl, love, scribblings, அனுபவம், கவிதை, காதல், தமிழ், நினைவு, குறிச்சொல் இடப்பட்டது அன்பு, உருவகம், காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, மொழி, யட்சி, வாழ்க்கை on December 8, 2009 | 21 மறுமொழிகள் »
கடைசி பக்க கிறுக்கல்கள் -7
Posted in Adaleru, scribblings, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem on அக்டோபர் 26, 2009 | 10 மறுமொழிகள் »
ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்
If you enjoyed this [...]
சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்
Posted in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அனுபவம், உருவகம், கிறுக்கல், நொந்த அனுபவமும், மொக்கை, மொழி, வாழ்க்கை, விருது, life style, sad on அக்டோபர் 20, 2009 | 40 மறுமொழிகள் »
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல [...]
கடைசி பக்க கிறுக்கல்கள் -6
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், பொது, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், கிறுக்கல், புனைவு, பூனை on செப்டம்பர் 18, 2009 | 24 மறுமொழிகள் »
நீர்
உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்
நிலம்
உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி
காற்று
நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயம்
நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-5
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், குறிச்சொல் இடப்பட்டது அடலேறு, அன்பு, காதல், கிறுக்கல், love, poem, sad on செப்டம்பர் 15, 2009 | 14 மறுமொழிகள் »
உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் [...]
இலக்கண காதல் -1
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, கிறுக்கல், தமிழ், நினைவு, மொழி on செப்டம்பர் 12, 2009 | 18 மறுமொழிகள் »
பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
[...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem on ஆகஸ்ட் 11, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-2
Posted in Adaleru, Imagination, love, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, கிறுக்கல், நினைவு, புனைவு, பேச்சிலர், life style on ஆகஸ்ட் 6, 2009 | 9 மறுமொழிகள் »
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி
மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி
அருகில் இருந்து I Love You SMS அனுப்பி
நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து
ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி
யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி
வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய்
புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து
இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர
வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி
விட்டபின் [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-1
Posted in Adaleru, Imagination, life, love, கம்ப்யூட்டர், கவிதை, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, காதல், கிறுக்கல், சோகம், நினைவு, புனைவு, பேச்சிலர், மொக்கை, வாழ்க்கை, love, sad on ஆகஸ்ட் 5, 2009 | 8 மறுமொழிகள் »
அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
தேவதைகளின் தேவதை பிறந்தநாள்
Posted in birthday, love, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, கிறுக்கல், நினைவு, birthday, love, poem on ஜூன் 22, 2009 | 36 மறுமொழிகள் »
சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது
எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார்
பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும்
இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட
ஆகலாம்.
என்னை பார்க்க தாமதாய் வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ [...]


















