Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘சோகம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

(புதுக்கவிதை)
அந்த பழுப்பு மாலையின்
பேருந்து பயணத்தில்
தெரியாமல் கால் பட்டதுக்காய்
மூன்று முறை மன்னிப்பு
கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்
படிக்காதவனாகவும் தெரிந்ததால்
மனைவியின் முன் வீரம் காட்ட
அனைவரும் பார்க்கையில்
கடினமான வார்த்தை கொண்டு
திட்டிய போது மெதுவாய் உருமாற
தொடங்கி இருந்தது எனக்கான முகம்
***********************
(நவீன கவிதை)
வினையாலனையும் பெயரின்
வாசம் முகர்ந்த இருளின்
சலனத்தில் தொடங்கியது
கடைசி நீட்சியின் பகல்.
வெம்மை தணிந்தவனின் சட்டை
இழுத்து அட்சரச ஆழியின்
சுக்கான் கொண்டு
கரு மயிர் திரவத்தில்
முக்கிய பின் வானத்தில்
மிகிழம் பூவுடன் விளையாடும்
நிலா சிகப்பாய் உருப்பெற்றது
எல்லார் முன்பாக  முகம் தொலைத்தவனுக்கு

நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure [...]

முழு பதிவையும் வாசிக்க »

நண்பனின் நிசப்த கவிதையின்
லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய
நிசப்த அலையொன்று
என்னையும் ஆட்கொண்டது
கால எந்திரத்தின் வழியே
நிசப்தத்தை நிறுத்த
எண்ணியபோது கடிகாரத்தின்
வழியாய் புகுந்து கொண்ட
நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று
நிறுத்திப்போனது நிசப்தவெளியில்.
ஆழியெங்கும் நிசப்த அலைகள்
உணர்ச்சியின் வேகத்தில்
கெட்ட வார்த்தையாய்
வெளியேறிய எச்சில்
குமிழிகள் யாவும்
நிசப்த வெளியெங்கும்
சலனமற்று கரைந்த நேரத்தில்
கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கத்தி விரைத்தது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஈழ குழந்தை
நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான என் கவிதை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல்.
போட நாயே என்பாள். புன்னகை புரி!!!
கனவுகளில் காதலியை தேடு.
நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ.
கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது
அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை
கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!!
தியானம் செய் !! கடவுளை காண்!!!
கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!!
காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக உட்கொள்!!!
கொட்டும் பனியில் உரைந்திடு!! தனி அறையில் சத்தமிட்டு அழு [...]

முழு பதிவையும் வாசிக்க »

காதல் பாடம்

படிப்பு தான்  உயிர் என்று இருந்தவனை
கண் பார்த்து காதல் பள்ளியில் சேர்தவளே..
உண்மையில் காதல்  பள்ளியில் நீ ஒரு வல்லுனன்
என் உணர்வுகளில் உயிராய் இருந்து என்
நினைவு முழுக்க நிறைந்தவளே…….
மாற்றுவதற்கும், மறப்பதற்கும் காதல் என்ன
சிறு குழந்தையின் தவறா என்ன ???
உன் பெயரை பதிவு  செய்த  இடத்தில் அழித்து இன்னொரு
பெயரை பதிவு  செய்ய இதயம் ஒன்றும் கரும்பலகை அல்ல..
உதிரத்தில் கலந்து உயிரில் நிறைந்து  உணர்வில் ஒன்றானது
காதலென்று தெரியதவளே !!!
பாலில் நீர் கலந்தால் கூட பிரித்து விடலாம்
என் உதிரத்தில் உயிராக கலந்தவளே
நான் எப்படி  [...]

முழு பதிவையும் வாசிக்க »

காதல் சிறை கைதி

உன்னை பற்றி நினைக்கும் போதே
எதோ அமிலம் விளுங்கினது போல
ஒரு இனம் புரியாத உணர்வு…
துரோகம் என்ற வர்த்தையின்
வலிகளை தவணை முறையில்
ஈட்டியால் குத்தி புரியவைத்தவள் நீ….
என் இரண்டாம் தாய் என்று சொல்லி
இருகண்ணை கட்டி
உயிரை எடுத்து சென்றவள் நீ….
என் கண் பார்த்து எனக்கு காதல் பாடம்
நடத்தியவளே…
என்னை வளர்த்த பெற்றோர்க்கு நான்
ஏதும் செய்ய வேண்டும் என்று நீ சொன்னது
சரி தான் அதற்கு நானும் என் காதலும் தானா கிடைத்தோம் உனக்கு..
உன் பெயரை பதிவு செய்த இடத்தில் இன்னொரு பெயரை
பதிவு செய்ய இதயம் ஒன்றும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

மறக்க வேண்டும் உன்னை

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…
என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை
இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க
வேண்டுமென்று நினைக்க
மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.

முழு பதிவையும் வாசிக்க »