‘புனைவு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

கடவுளை இன்று “டைடல்பார்க்”கில் சந்தித்தேன் கோட் சூட் சகிதமாக கையில் பிளாக் பெரியுடன் லிப்டில் இருந்து வெளிப்பட்டார். ஆச்சர்யம் அடைந்தவனாய் உங்களிடம் பேச வேண்டும் என்றதற்கு தற்போது பிஸியாக இருப்பதாக சொல்லி செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டார். கழுத்தில் தொங்கிய நிறுவன அடையாள அட்டையை காட்டி பெருமை பட்டுக்கொண்டார். இங்கே எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள் என்றதற்கு சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம் புதிர் வினாக்கள் 20ம் கடைசி அறையில் நடைபெற்ற குழு விவாதத்தில் வெற்றி பெற்றும் வேலைக்கு சேர்ந்ததாக [...]

               வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது . நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் [...]

கனவுகளால் ஆனவளை  வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த ‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]

வார்த்தைகளால் ஆனவளை இன்று பேருந்தில் சந்திதேன் வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது அவள் உடம்பு. கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் என்று எழுதியிருந்தது காது மூக்கு என அனைத்திற்கும் அப்படியே விகாரமில்லாமல் அழகாகவே இருந்தாள் நீ யார் என்றதற்கு மெல்லிய புன்னகை ததும்பியவளாக வாய் திறந்தாள். வார்த்தைகள் ஒவ்வொன்றாக‌ கீழே விழுந்தது விழுந்த வார்த்தையை பொறுக்கி சட்டைபைக்குள் போட்டுக்கொண்டேன் சட்டைபை நிரம்ப‌ நிரம்ப‌ பேசினாள் அப்படி நிரப்பப்பட்ட வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டது தான்  இந்த கவிதை -அடலேறு [...]

கடைசி ஆண்

Posted: ஆகஸ்ட் 18, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, life
குறிச்சொற்கள்:, ,

கருஞ்சிவப்பான இரவில் தீக்கிரையாக்கினாள் மதுரையை கையில் சிலம்பு தகிக்கிறது ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள் விதை கிழிபட்டு மரிக்கின்றனர் அனைவரும் படக்கென போர்வை நீக்கியவள் விந்து வற்றிப்போன இரவில் என்னை புணர சொல்கிறாள் நானோ இப்பூமியின் கடைசி ஆண்

சத்தம்மின்றி கசிந்து  கொண்டிருந்தது இரவு, வெளியெங்கும்  பெய்ய தொடங்கியது   அயோடைட் மழை , ஏணியில்  ஏறிகொண்டிருக்கிறான்  பூமியின் கடைசி மனிதன், நாய்களற்ற தெருவில்  குரைத்துக்கொண்டிருக்கின்றன எலக்ட்ரானிக் பொம்மைகள்   , எடையற்று காற்றில் மிதந்து  கொண்டிருக்கிறேன் நான் , “நிலவிற்கு  வருக” பெயர் பலகையை         துடைத்துக்கொண்டிருக்கிறாள் யாருமற்ற அனாதை சிறுமி.

    நீயோ ”பிறந்தநாளை” கொண்டாடிக்கொண்டிருக்கிறாய் நீ பிறந்ததற்காக அந்தநாளை  மற்ற நாட்கள் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரியுமா உனக்கு *************** பிறந்தநாள் அன்று என்னை பார்ப்பதற்காக பூக்களை  சூடிக்கொள்கிறாய் பூக்களோ உன் தலையில் ஏறி விட்ட மமதையில் உனக்கு என்னை விட பூக்கள் மீது தான் காதல் அதிகமென  வம்புக்கிழுக்கின்றன என்னை  *************** கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாய். கடல் அலையை கையிலேந்தி                      [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

உனக்கு Rover தெரியுமா என்கிறாய் தெரியாது என்கிறேன் !!! Rover தான்  Windows கணிணியில் வரும் நாய் குட்டி என சொல்லி பறக்கும் முத்தம் ஒன்றை  அதற்கு தந்தாய் Rover ஆகும்  சாத்தியங்களற்று விழி பிதுங்கி நிற்கிறேன் நான்

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே