ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்
If you enjoyed this [...]
‘மொழி’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
கடைசி பக்க கிறுக்கல்கள் -7
Posted in Adaleru, scribblings, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem on அக்டோபர் 26, 2009 | 10 மறுமொழிகள் »
சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்
Posted in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அனுபவம், உருவகம், கிறுக்கல், நொந்த அனுபவமும், மொக்கை, மொழி, வாழ்க்கை, விருது, life style, sad on அக்டோபர் 20, 2009 | 36 மறுமொழிகள் »
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல [...]
எதிர் கூர்தலறம்
Posted in Adaleru, Imagination, அடலேறு, கவிதை, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அப்பா, கடவுள், கவிதை, தமிழ், புனைவு, மொழி on செப்டம்பர் 30, 2009 | 18 மறுமொழிகள் »
.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத [...]
இலக்கண காதல் -1
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, கிறுக்கல், தமிழ், நினைவு, மொழி on செப்டம்பர் 12, 2009 | 18 மறுமொழிகள் »
பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
[...]
வழக்கொழிந்த வார்த்தைகள்-தொடர் பதிவு
Posted in தமிழ், தொடர் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது தமிழ், தொடர் பதிவு, மொழி on ஜனவரி 24, 2009 | 15 மறுமொழிகள் »
வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி .
நான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற.
இனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலாம்
[...]

















