‘விருது’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

   தமிழ் நம் தாய்மொழி. ஒரு மொழியை பற்றி சொல்லும் போதே அதன் கம்பீரமும் வரலாறும் நம்மை மட்டும் அல்ல எத்தனை எத்தனையோ அயல் நாட்டு மனிதர்களை கூட தமிழ் மீது பித்து பிடிக்க வைத்துள்ளது. நம் மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்,முக்கியமாக  செம்மொழியும் ஆகும். 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் [...]

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர். மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு [...]

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

கவுண்டர் காட்டுக்கு கதிரறுக்க  போனவளே மத்தியானம் ஆச்சுதே இந்த மாம(ன்) மேல நெனப்பிருக்கா உச்சி பொழுதாச்சுதே உசுரு நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு காத்திருக்க படுத்தபடியே நம்மூட்டு எறுப்புக்குதா சோறு வெக்கற போதையில அடிபட்ட காலுக்கு வருத்தப்படாத மூணே மாசத்துல சரியாகி போகுமுன்னு சொல்லிப்புட்டா மருத்துவச்சி அடிபட்ட நேரத்தவிட என்னக்காக வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி என் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

இன்று அடலேறு வலைபக்கம் யூத்புல் விகடனில் குட் பிளாக்(Good Blog) ஆக பக்க பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்வு செய்தவர்களுக்கும், வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் அடலேறுவின் நன்றிகள்.

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல.. தொலைபேசி உரையாடல் -1 நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா? எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க? நான்:அடலேறு பேசறங்க… எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா? நான்: இல்லங்க என் பேரு அடலேறு.. எதிர்முனை:என்ன அடலொரு ஆ.. (டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க) அலோவ் [...]

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள். இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் , புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும், புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.