மார்ச், 2008 க்கான தொகுப்பு

நான் உன்னவன்

Posted: மார்ச் 25, 2008 by அடலேறு in காதல்

unnavan2.jpg

மறக்க வேண்டும் உன்னை

Posted: மார்ச் 20, 2008 by அடலேறு in மொக்கை
குறிச்சொற்கள்:

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…

என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை

இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க

வேண்டுமென்று நினைக்க

மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.

உதிர்ந்த பூக்கள்

Posted: மார்ச் 5, 2008 by அடலேறு in காதல்

உதிர்ந்த பூக்கள்

பட்டுப்போன தென்னை மரம்

Posted: மார்ச் 3, 2008 by அடலேறு in காதல்

அதிகாலையில் அம்மாவின்

கெஞ்சலுடன் போர்வை மடித்து

அப்பாவின் திட்டுகளுடன் பாடம் படிக்க

தங்கையின் கையில் காபி

வாங்கி திண்னையில் அமரும்

போது இந்த பட்டுப்போன

தென்னை மரம் உன்னை

நீயாபகபடுத்தி கொண்டே

இருக்கும் நம்பட்டுப் போன  காதலை

ரெயில் பயணங்களில்

Posted: மார்ச் 3, 2008 by அடலேறு in நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்:

ரெயில் பயணங்களில் அமைதியாய்
என் கை பற்றி அமர்திருப்பாய்.

நான் திரும்பி பார்க்கும் போது மட்டும்
தோள் சாய்ந்து தூங்குவது போல் நடிப்பாய்.

துங்குபவளை எழுப்பலாம் துங்குவது போல் நடிப்பவளை?

எப்போதும் அடம் பிடிப்பாய் சன்னலோர இருக்கை கேட்டு,

பல செல்ல சண்டைகளுக்கு பிறகு தீர்மானத்தை நீயே
நிறைவேற்றுவாய் சன்னலோரம் உனக்கு தான் என்று.

ஒரே ஒரு விதிவிலக்குடன்  இந்த முறை

இந்த இருக்கை உனக்கு என்றும்

அடுத்த முறையும் உனக்கு தான் என்றும்.

இருக்கைகள் ஆரம்பித்து

இறங்கும் வரை நடக்கும்

இந்த சண்டையின் நடுவே

உதடு குவித்து

ஒரு முத்தம் தா என்றால் கண்களை

சுருக்கி நாக்கை கடித்து.,

டேய்!!!என்பாயே முத்ததிலும்

இனிமையடி உன் அந்த பார்வை

திடீர் என்று  பெருத்த சத்தத்துடன்

எதிரில் சென்ற ரயில் ஒன்று

கெடுத்துப் போனது.,

என் நினைவுகளையும்.,

நீ  இருப்பதக்கான புனைவையும்.

முதல் பதிவு

Posted: மார்ச் 3, 2008 by அடலேறு in பொது

என்னுடைய கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் வரி வடிவம்  கொடுக்க ஒரு சிறு முயற்சி எடுத்துள்ளேன்.  தாருங்கள் உங்களுடைய கருத்துக்களை பின்னுட்டமாய் 
இருப்போம் அனைவருக்கும் ஒரு முன்னோட்டமாய்

கலையாத கனவுகளுடன்
அடலேறு