ஏப்ரல், 2008 க்கான தொகுப்பு

உன்னை நினைத்து கொள்கிறேன்

Posted: ஏப்ரல் 22, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:

உனக்கு பிடித்த மண் வாசனை நுகரும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த செங்கல் துகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த தென்றல் என்னை தீண்டும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மலை சாரல் என்னை நனைக்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த பாடல் என்னை தழுவும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த பிடித்த சாமி சிலைகள் கடந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மணித்துளிகள் நகர்ந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மொட்டை மாடி நிழல் என்னை மூடும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

இப்படி எல்லாம் உன்னை நினைத்துக் கொள்ளலாம்
ஆனால் இப்படி எல்லாம் நான்
உன்னை நினைப்பதே இல்லை ..

நான் சுவாசிக்கும் வேளைகளில் மட்டுமே உன்னை
நினைத்துக் கொள்கிறேன் ..

Advertisements

காதல் சிறை கைதி

Posted: ஏப்ரல் 21, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:

உன்னை பற்றி நினைக்கும் போதே
எதோ அமிலம் விளுங்கினது போல
ஒரு இனம் புரியாத உணர்வு…

துரோகம் என்ற வர்த்தையின்
வலிகளை தவணை முறையில்
ஈட்டியால் குத்தி புரியவைத்தவள் நீ….

என் இரண்டாம் தாய் என்று சொல்லி
இருகண்ணை கட்டி
உயிரை எடுத்து சென்றவள் நீ….

என் கண் பார்த்து எனக்கு காதல் பாடம்
நடத்தியவளே…

என்னை வளர்த்த பெற்றோர்க்கு நான்
ஏதும் செய்ய வேண்டும் என்று நீ சொன்னது
சரி தான் அதற்கு நானும் என் காதலும் தானா கிடைத்தோம் உனக்கு..

உன் பெயரை பதிவு செய்த இடத்தில் இன்னொரு பெயரை
பதிவு செய்ய இதயம் ஒன்றும் ஒலிநாடா இல்லை …

உன்னை மறக்க முடியுமா என்று கேட்டால்
முடியாது என்று சத்தியமிட்டு சொல்கிறது உள் மனது ….
முடியவில்லை என்றால் முயசித்து பார் எங்கிராய் நீ …

உன்னை மறக்க நினைத்து நினைத்து மரத்து போனது
என்னவோ என் மனது மட்டும் தான் உன் நினைவு அல்ல..

காதல் சன்னல் கம்பிகளுக்கிடையே சிறை கைதியாய்
கைது செய்தது போதும் அவிழ்து விடு அடங்கி விட்டு
போகட்டும் இந்த உயிர் …