ஜூன், 2008 க்கான தொகுப்பு

முத்தம்

Posted: ஜூன் 10, 2008 by அடலேறு in காதல்

Hi என்று ஆரம்பித்து தொடங்கும் நம் குறுஞ்செய்தி பரிமாற்றம்…

உடல்,நலம் விசாரிப்பு  அனைத்தும் முடிந்ததும் வருவாய்
எனக்குள் இருக்கும் உன்னை பற்றி விசாரிக்க…

விசாரிப்பின் நடுநடுவே வரும் சண்டைகளை கொடுப்பதும்
பெறுவதும் என்ற காதல் விதிபடி நயமாய் முடித்து வைப்பாய் நீ ..

நடு நிசி நெருங்க நெருங்க காதல் போதை தலைக்கு ஏறி
என்னையும் அறியாமல் உறங்கி போவேன் …

காலை எழுந்ததும் குறுஞ்செய்தி உனக்கு தட்டி விட்டு உனது
பதிலுக்காய் காத்திருப்பேன்..சொல்லாமல் தூங்கிய குற்றத்திர்க்காக
என்னை தவிக்க விடுவாய் நீ …

இந்த முறை மீண்டும் தொடங்கும் சண்டையில்  கொடுப்பதும்
பெறுவதும் என்ற காதல் விதிபடி நயமாய் முடித்து வைப்பேன் நான்  ..

Advertisements