ஜூலை, 2008 க்கான தொகுப்பு

கனவு காதலி

Posted: ஜூலை 29, 2008 by அடலேறு in காதல், மொக்கை
குறிச்சொற்கள்:,

என்ன நினைச்சயா என்று
கேட்டவளிடம் நினைச்சேன் என்றதிற்கு
சண்டை போடுகி்றாள் மறந்தாதான
நினைக்க முடியும் அப்படின்னா நீ என்ன மறந்துருக்க என்று.. .

கடைகளில் உள்ள எல்லா பூக்களும்
விட்டு விட்டு அந்த மஞ்சள் நிற ரோஜாவை
மட்டும் எடுத்தாயே சோகத்தில் மற்ற பூக்கள் எல்லாம்
அழுகும் சத்தம் கேட்கவில்லையா…

எத்தனை வேலை பளு இருந்தாலும்
அலைபேசிக்கு அழைப்பு விடுத்து
ஒரு தடவ i love you சொல்லு என்று குழந்தை போல கேட்கும்
போது உண்மையாகவே சொல்வேன் i breath you என்று…

எத்தனை சண்டை என்றாலும் முதல்
கேள்வி உன்னிடம் இருந்து வரும்
சாப்ட்டயா?? என்று அதில் கொட்டி
கிடக்கிறது உனக்கு என்மீதான காதல்…


If you enjoyed this post, make sure you
subscribe to my RSS feed!

Advertisements

காதல் படலம்-1

Posted: ஜூலை 28, 2008 by அடலேறு in சிறுகதை, நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்:

மழை பெய்து முடித்த ஒரு காலை நேரம் மீண்டும் வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்த மழை துளி நம் காதல் விவகாரம் தெரிந்த உன் வீட்டில்  நம் காதலுக்கு பச்சை கொடி காட்ட சரக் சரக் என்று புறப்பட்டது என் காதல் புகை வண்டி. எவ்வளவு சொன்னாலும் கேட்காத என் மனம் வழக்கம் போல கனவுகளை வாடகைக்கு எடுத்து கொண்டு தறிகெட்டு சுற்றி கடைசியில் உன்நினைவுகளும் கூட்டி கொண்டு எங்கெங்கோ பறக்கிறது.  
அடுத்த நிமிடம் உன் குரல் கேட்க துடித்த என் செவிக்கு விருந்தாக என் அலை பேசியில் உன் பெயரும் ரிங்கரமாக உனக்கு பிடித்த பாடலும் கண்டவுடன் எப்போதும்  தவிக்கவிடும் நான் முதல் ஓசையில் எடுக்க மறுமுனையில் உன் அழுகுரல் கேட்டதும் தவித்து போனேனடி. கடைசியில் நீ சொன்னது வார்த்தை இல்லை வாழ்க்கையடி.” நா சொன்னல நம்ம love உண்மையானது டா”
“ஹலோ “
!!!!!!!!!!!!!!!!!
“பேசும்மா “
“i love you”
“நா இப்பவே உன்ன பாக்கணும் “
“இப்பவா !!! சரி பா நீ வீட்டுக்கு வா”
“இல்ல இப்ப முடியாது நீ வெளிய வரையா “
“சரி !! நம்ம எப்பவும் பாப்பமே அங்க 5 மணிக்கு வந்துரு மா”

5 மணிக்கு தவிப்புடன் காத்திருக்கிறேன் கூடவே பரிமாருதளுக்காக கொண்டு வந்த காதல் பொட்டலம் இன்னும் பிரிக்கபடாமல் இருக்க சலித்துக் கொண்டது என்னிடம்.
நான் என்ன செய்ய ???
எப்போதும் போல இல்லாமல் சீக்கிரம் வந்த என்னை உன் விழிகள் வியப்புடன்
பார்த்த பார்வையில் மீண்டும் தொலைத்து போனேன் உன்னிடம்..

புருசா என்ன சீக்கிரம் வந்துட்ட ?????

புருசா என்ற வார்த்தையில் முதல் முறையாக வெட்கம் கற்றேன் !!!

என்னங்க!!!  நாளைக்கு வீட்டுக்கு எங்க அத்தை மாமா எல்லாத்தையும் கூட்டிட்டு  வாங்க !!

டேய் என்னும் வார்த்தை என்னங்க  என்று மாறிய தருணம் ஒரு முறை வான் முட்டி மண் தொட்டேனே…!!!!

-நினைவுகள் தொடரும் அடுத்த வாரம்


If you enjoyed this post, make sure you
subscribe to my RSS feed!

உன் காதல் கடிதம்

Posted: ஜூலை 15, 2008 by அடலேறு in நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்: