செப்ரெம்பர், 2008 க்கான தொகுப்பு

டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?

Posted: செப்ரெம்பர் 26, 2008 by அடலேறு in நட்பு
குறிச்சொற்கள்:,

டேய் அண்ணா , உன்னை அண்ணா என்று அழைத்ததாக நியாபகமே எனக்கு இல்லை. ஒன்றுமே அறியாத கடை குக் கிராமதிலிருந்து என்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவன் நீ!!! உனக்கு நியாபகம் இருக்கிறதா காலையில் இருந்து மாலை வரை கிணற்றில் குதித்து விளையாடியது. கொரங்கு பிடல் சைக்கிள் முதல் ராம் குமார் கிணற்றில் நீச்சல் வரை கற்று கொடுத்தவனே நீ தான்.உனக்கு நீச்சல் தெரியாது என்று நான் கேலி செய்யும் போதெல்லாம் நீருக்குள் என்னை அழுத்த வருவாய், ஆனால் அழுத்துவது போல் அழுத்தி மேலே தூக்கி விடுவாயே அதில் கொட்டி கிடக்கும் உனக்கு என் மீதான அன்பு. ஆனால் அப்பாவின் சைக்கிள் துடைப்பதில் மட்டும் என்னை மாட்டி விடுவாய்.

சிறு வயதில் இருந்தே உனக்கும் எனக்கும் எப்போதும் சண்டை தான். உனக்கு விளையாட தெரியாத கிரிகெட் முதல் நான் ,நீ , ரவி , அபிராமி, அனு,விளையாடும் கபடி வரை. முருகானந்தம் விளையாடும் பம்பரம் முதல் நானும் நீயும் விளையாடும் சதுரங்கம் வரை. செவ்வாய்கிழமை சந்தையில் வாங்கும் பஜ்ஜி முதல் அப்பா வாங்கி வரும் நெல்லை அல்வா வரை . என்னுடன் எதிலும் ஒத்து போகதவன் நீ.

நானும் நீயும் சண்டையிடும் போதெல்லாம் அதிகமாக நீ தான் விட்டு கொடுப்பாய் எதற்கு எடுத்தாலும் முரண்டு பிடிப்பேன் நான். எனக்கே தெரியும் என்னிடம் பொய்யாக தோற்றுப் போவாய் பலமுறை எனக்காக.

ஆனால் நம் சண்டைக்கு இடைஞ்சலாக வந்தது உன் பொறியியல் படிப்பு. விடுதியில் தான் தங்கி படிக்க வேண்டும் என்ற நிலை உனக்கு, நீ இல்லாமல் எப்படி பொழுதை கழிப்பது என்ற கவலை எனக்கு. நீ கல்லூரி சேரப்போகும் அந்த நாள் உனக்கு தெரியுமா தலையனைக்கு அடியில் நானும் நம் பூனையும் முகம் புதைத்து அழுதது கூட எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. விடுமுறை எப்போது வரும் நீ எப்போது வருவாய் உன்னுடன் ஜாலியாக பொழுதை களிக்கலாம் என்றே நினைப்பேன். நீ வரும் வார இறுதி நாட்களில் ஜோசுவா கடை கோழி ஒன்றிக்கு இறுதி சடங்கு எப்போதும் நடக்கும்.

நீ வரும் விடுமுறை நாட்களில் போது கூட நீயும் நானும் சண்டை போடுவதற்கு நேரமே கிடைக்காது. அப்போதெலாம் என்னிடம் பேசுவதயே குறைத்தாய். வார்த்தைகளை வாய்க்குள்லேயே முளுங்குவாய். உன்னிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் நினைப்பேன் போடா “முட்டை கண்ணா” என்று சொல்ல வேண்டும் என்று ஆனால் அப்பா தான் என்னை உன்னுடன் பேசவே விடமாட்டார். பேசினாலும் சண்டை தானே போட போகிறாய் சும்மா இரு என்று . கடைசியாக நானும் நீயும் போட்ட சண்டை நியாபகம் இருக்கிறதா உன்னுடைய நீலகலர் சட்டைக்காக.

காலத்தின் கைகளில் வருடங்கள் பல உருண்டு ஓடின. இப்போது நீயும் நானும் மென்பொருள் பொறியாளர்களாக நீ எதோ ஒரு மூலையில் நான் எதோ ஒரு மூலையில். நம்மை பற்றி நினைக்கும் போதெல்லாம் இதழின் கடைசி பகுதியில் வந்து நிற்கும் உனக்கான ஒரு புன்னகை . இப்போதும் கேட்கிறேன் உன்னிடம்

சண்ட வெச்சுக்கலமா????

ஆனால் இந்த முறை ஒரு விதி விலக்கு தோற்பது நானாக தான் இருக்க வேண்டும்

//உங்களுக்கும் உங்க அண்ணா நியாபகமா அப்ப சொல்லுங்க பின்னுட்டத்துல//


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements

உன் ஈர நாவின் ஸ்பரிசம்

Posted: செப்ரெம்பர் 17, 2008 by அடலேறு in காதல், நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்:,

தொலைதூர பயணங்களில் தோள் சாய்ந்து
துங்கும் மைஇருட்டு வேளைகளில்
எப்போதும் படும் உன் ஈர நாவின் ஸ்பரிசம்….

காதல் சிறையில் அடைபட்டு பல வருடங்கள்
கடந்து விட்டது. என்னை விட்டு நீ போன பிறகும்
கூடஎன்னை நானே மீட்டுக்கொள்ள வழி தெரியாமல்
இன்னும் விழி பிதுங்கி நிற்கிறேன்..

உன்னுடைய கதகதப்பு, கைக்குட்டை வாசனை
தலையை வருடி விடும் மயிலறகு விரல்கள் அனைத்தும்
மறக்க நினைத்து நினைத்து நீங்காத நினைவாகி போனது ….

வருடங்கள் பல கடந்து
இப்போதும் ஏங்கும் மனம் தொலை தூர
பயணங்களில் உன் ஈர நாவின் ஸ்பரிசமும் அதே கதகதப்பும் ……


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

காதல் பாடம்

Posted: செப்ரெம்பர் 7, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:

படிப்பு தான்  உயிர் என்று இருந்தவனை
கண் பார்த்து காதல் பள்ளியில் சேர்தவளே..

உண்மையில் காதல்  பள்ளியில் நீ ஒரு வல்லுனன்
என் உணர்வுகளில் உயிராய் இருந்து என்
நினைவு முழுக்க நிறைந்தவளே…….

மாற்றுவதற்கும், மறப்பதற்கும் காதல் என்ன
சிறு குழந்தையின் தவறா என்ன ???
உன் பெயரை பதிவு  செய்த  இடத்தில் அழித்து இன்னொரு
பெயரை பதிவு  செய்ய இதயம் ஒன்றும் கரும்பலகை அல்ல..

உதிரத்தில் கலந்து உயிரில் நிறைந்து  உணர்வில் ஒன்றானது
காதலென்று தெரியதவளே !!!

பாலில் நீர் கலந்தால் கூட பிரித்து விடலாம்
என் உதிரத்தில் உயிராக கலந்தவளே
நான் எப்படி  உன்னை பிரிக்க..

வார்த்தை   கூட வேண்டாம் உன் பார்வை
மட்டும் போதும்  என்று என் கண் கட்டி
காதல் பாடம் நடத்தியவளே….

இன்று என்னை மறந்துவிட்டு புது
கனவுகளுடன், கணவனையும் தேடி
போகிறாயாமே !!!!!!!

ஆண்கள் என்றால் அழித்து வரையும் ஓவியம்
என்றா நினைத்தாய்………..

அன்று உன் இதயம் வேண்டும், என்று கேட்டவளே
இன்று தான் தெரிகிறது நீ கேட்டது
விரும்புதலுக்காக அல்ல விளையாடுவதற்குக்காக  
என்று ..

இன்று கடைக்கரை மணலில் தனியாக
உன் பெயரெழுதியபடி நான் ..


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!