டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?

Posted: செப்ரெம்பர் 26, 2008 by அடலேறு in நட்பு
குறிச்சொற்கள்:,

டேய் அண்ணா , உன்னை அண்ணா என்று அழைத்ததாக நியாபகமே எனக்கு இல்லை. ஒன்றுமே அறியாத கடை குக் கிராமதிலிருந்து என்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவன் நீ!!! உனக்கு நியாபகம் இருக்கிறதா காலையில் இருந்து மாலை வரை கிணற்றில் குதித்து விளையாடியது. கொரங்கு பிடல் சைக்கிள் முதல் ராம் குமார் கிணற்றில் நீச்சல் வரை கற்று கொடுத்தவனே நீ தான்.உனக்கு நீச்சல் தெரியாது என்று நான் கேலி செய்யும் போதெல்லாம் நீருக்குள் என்னை அழுத்த வருவாய், ஆனால் அழுத்துவது போல் அழுத்தி மேலே தூக்கி விடுவாயே அதில் கொட்டி கிடக்கும் உனக்கு என் மீதான அன்பு. ஆனால் அப்பாவின் சைக்கிள் துடைப்பதில் மட்டும் என்னை மாட்டி விடுவாய்.

சிறு வயதில் இருந்தே உனக்கும் எனக்கும் எப்போதும் சண்டை தான். உனக்கு விளையாட தெரியாத கிரிகெட் முதல் நான் ,நீ , ரவி , அபிராமி, அனு,விளையாடும் கபடி வரை. முருகானந்தம் விளையாடும் பம்பரம் முதல் நானும் நீயும் விளையாடும் சதுரங்கம் வரை. செவ்வாய்கிழமை சந்தையில் வாங்கும் பஜ்ஜி முதல் அப்பா வாங்கி வரும் நெல்லை அல்வா வரை . என்னுடன் எதிலும் ஒத்து போகதவன் நீ.

நானும் நீயும் சண்டையிடும் போதெல்லாம் அதிகமாக நீ தான் விட்டு கொடுப்பாய் எதற்கு எடுத்தாலும் முரண்டு பிடிப்பேன் நான். எனக்கே தெரியும் என்னிடம் பொய்யாக தோற்றுப் போவாய் பலமுறை எனக்காக.

ஆனால் நம் சண்டைக்கு இடைஞ்சலாக வந்தது உன் பொறியியல் படிப்பு. விடுதியில் தான் தங்கி படிக்க வேண்டும் என்ற நிலை உனக்கு, நீ இல்லாமல் எப்படி பொழுதை கழிப்பது என்ற கவலை எனக்கு. நீ கல்லூரி சேரப்போகும் அந்த நாள் உனக்கு தெரியுமா தலையனைக்கு அடியில் நானும் நம் பூனையும் முகம் புதைத்து அழுதது கூட எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. விடுமுறை எப்போது வரும் நீ எப்போது வருவாய் உன்னுடன் ஜாலியாக பொழுதை களிக்கலாம் என்றே நினைப்பேன். நீ வரும் வார இறுதி நாட்களில் ஜோசுவா கடை கோழி ஒன்றிக்கு இறுதி சடங்கு எப்போதும் நடக்கும்.

நீ வரும் விடுமுறை நாட்களில் போது கூட நீயும் நானும் சண்டை போடுவதற்கு நேரமே கிடைக்காது. அப்போதெலாம் என்னிடம் பேசுவதயே குறைத்தாய். வார்த்தைகளை வாய்க்குள்லேயே முளுங்குவாய். உன்னிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் நினைப்பேன் போடா “முட்டை கண்ணா” என்று சொல்ல வேண்டும் என்று ஆனால் அப்பா தான் என்னை உன்னுடன் பேசவே விடமாட்டார். பேசினாலும் சண்டை தானே போட போகிறாய் சும்மா இரு என்று . கடைசியாக நானும் நீயும் போட்ட சண்டை நியாபகம் இருக்கிறதா உன்னுடைய நீலகலர் சட்டைக்காக.

காலத்தின் கைகளில் வருடங்கள் பல உருண்டு ஓடின. இப்போது நீயும் நானும் மென்பொருள் பொறியாளர்களாக நீ எதோ ஒரு மூலையில் நான் எதோ ஒரு மூலையில். நம்மை பற்றி நினைக்கும் போதெல்லாம் இதழின் கடைசி பகுதியில் வந்து நிற்கும் உனக்கான ஒரு புன்னகை . இப்போதும் கேட்கிறேன் உன்னிடம்

சண்ட வெச்சுக்கலமா????

ஆனால் இந்த முறை ஒரு விதி விலக்கு தோற்பது நானாக தான் இருக்க வேண்டும்

//உங்களுக்கும் உங்க அண்ணா நியாபகமா அப்ப சொல்லுங்க பின்னுட்டத்துல//


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. deepa சொல்கிறார்:

  Hi adaleru,

  //தலையனைக்கு அடியில் முகம் புதைத்து அழுதது கூட எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது//

  i also did the same when my brother went to his hostel first time. nice thoughts. expect more from you. hats off.

 2. அடலேறு சொல்கிறார்:

  நன்றிக தீபா. உங்க வீட்லும் எங்க வீட்டு அட்லிசி பூனை

  குட்டி இருக்கா

 3. deepa சொல்கிறார்:

  what is this atlichi.

 4. அடலேறு சொல்கிறார்:

  @தீபா

  ஹிஹி ஹீ அட்லிசிங்கறது எங்கலோட பூனை குட்டி

  பேரு.

 5. ahmad சொல்கிறார்:

  kalakkettenga adaleru. nice.

 6. kadhali சொல்கிறார்:

  உங்க அண்ணா இந்த பதிவ பாத்தாரா?? ஒரு பின்னுட்டம்

  போட சொல்லுங்க அடலேறு.

 7. varun சொல்கிறார்:

  Hey buddy really nice. what a greate thoughts.
  have you shown this post to your brother

 8. அடலேறு சொல்கிறார்:

  @அஹ்மத்

  நான் என்னங்க அஹ்மத் கலக்குன. எல்லாம் எங்க

  அண்ணா தான். பின்னுட்டத்திற்கு ரொம்ப தேங்க்ஸ்

 9. அடலேறு சொல்கிறார்:

  @ வருண்

  நன்றிக வருண். உங்கள் முதல் வருகைக்கும்

  பின்னுட்டதிர்க்கும்

 10. அடலேறு சொல்கிறார்:

  @ காதலி

  பாத்தாரான்னு தெரியல . கண்டிப்பா பின்னுட்டம் போட

  சொல்ற. நன்றிக காதலி

 11. Sarathy சொல்கிறார்:

  அது ஒரு கனா காலம், நானும் என்னோட தம்பியும் போட்ட சண்டைகள் இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது………..

 12. uumm சொல்கிறார்:

  இளம் வயதில்..என் தம்பிக்கு..அக்காவாக..இருந்தேன்..தீராத..சண்டையோடு..
  இப்போதெல்லம்..அன்னையாகத்தான்..இருக்கமுடிகிறது.அவன்..கோபமெல்லாம்..வெறும்..குறும்பாக தெரிகிறது..
  நன்றி..அடலேறு..
  அவனை..நினைக்கவைத்ததற்க்கு.

 13. அடலேறு சொல்கிறார்:

  @சாரதி

  அமாங்க எப்ப நெனைச்சாலும் சிரிப்பு தான் வரும்.

  அண்ணன் தம்பி, அக்கா தங்கை. அக்கா தம்பி,

  இதெல்லாம் எவ்ளோ அழகான உணர்வுன்னு

  அனுபவிட்சவங்களுக்கு தான் தெரியும் .

  அடுத்த தடவ இந்தியா வர்றப்ப கண்டிப்பா உங்க தம்பி

  கூட சண்ட போடுங்க ஜாலியா .நன்றிக சாரதி.

  உங்களின் முதல் வருகைக்கும், பின்னுட்டதிர்க்கும்.

 14. அடலேறு சொல்கிறார்:

  @ உஉம்ம்

  உங்களோட கருத்துக்கள எவ்ளோ அழகா சொல்லிருகீங்க.

  தம்பிக்கு அன்னையாக.அழகான பின்னுட்டம். உங்க

  பெயர் சொல்லாமலே இருக்கிங்கலே ஏன் ?

 15. Kavitha சொல்கிறார்:

  Great da…Your Language fluency is great da…hmmm I didnt expect that u will write very nicely!!!!!!!!!!

 16. அடலேறு சொல்கிறார்:

  @ கவிதா

  தேங்க்ஸ் கவிதா .

 17. anjana sathurvethi சொல்கிறார்:

  Hi adaleru,

  This is the first time i have visited your website really nice.

  wanna to meet you and your brother. can i?

 18. அடலேறு சொல்கிறார்:

  @அஞ்சனா

  பாக்கலாமே அஞ்சனா. நன்றி உங்களின் முதல்

  வருகைக்கும், பின்னுட்டதிர்க்கும்

 19. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  கலக்கலாக இருக்கே, அடுத்த தலைமுறையில் ஒண்ணே ஒண்ணுதான் அண்ணன், தம்பி என்ற சொல் கூட மறைந்துவிடும் 😦

 20. uumm சொல்கிறார்:

  எனது..பெயர்..உமா மகேசுவரி…”உமாவும்..கவிதையும்” என்ற..தளத்தில்..கவிதைகள்..எழுதிக்கொண்டிருக்கிறேன்..நீங்கள்…அங்கே..வருகை தந்து..உங்களின்..மேலான…கருத்துக்களை..வழங்குமாறு…கேட்டுக்கொள்கிறேன்..(தமிழ் தளத்தில்..புக..முடியததால்..முன்பு..ஆங்கிளத்தில்..அனுப்பியிருந்தேன்..)

 21. அடலேறு சொல்கிறார்:

  @ கோவி.கண்ணன்

  நன்றிக கோவி.கண்ணன். அமாங்க அடுத்த தலை

  முறைல மறைய கூடாதுன்னு சாமிய வேண்டிக்கோங்க.

  ஆனாலும் நீங்கல்லாம் இருக்கறப்ப அப்படி நடக்க விட்டுருவீங்களா என்ன ?

 22. அடலேறு சொல்கிறார்:

  @ உமா

  உங்களோட தள முகவரி தெரியாததால் தான் உங்கள்

  வலை பக்கத்திர்க்கு வருகை தர முடியவில்லை.

  உங்களின் வலைபக்க முகவரியை பின்னுட்டத்தில்

  தெரிவிக்கவும். நன்றி உமா.

 23. மோகன் சொல்கிறார்:

  அடலேறு (இதற்கு என்ன பொருள்?) அருமையான பதிவு.

  எனக்கு என் தங்கையுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வருகின்றன. உங்கள் அண்ணனின் பின்னூட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை பின்னூட்டம் இட செய்யவும் (சண்டை போட்டாவது :))

 24. அடலேறு சொல்கிறார்:

  @ மோகன்

  அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.

  அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க

  முடியாத காளைக்கு அடலேறுன்னு சொல்லுவாங்க.

  அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க

  கூடாது!!! 🙂

  நானும் எங்க அண்ணா கூட சண்ட போடலான்னு தான்

  இருந்த பின்னுட்டம் போட சொல்லி. ஆனா பாருங்க

  அண்ணா பிஸி ஆ இருக்க மாதிரி பில்ட் அப்

  குடுக்கறாரு. கண்டிப்பா பின்னுட்டம் போட சொல்லற

  மோகன்

  நன்றிங்க மோகன். உங்கள் முதல் வருகைக்கும்

  பின்னுட்டதிர்க்கும்.

 25. Kavitha சொல்கிறார்:

  Good one!!!

  I don’t have a brother…but still wish I had one!!!

 26. Robin சொல்கிறார்:

  ஹலோ நான் தாங்க சதீஷோட அண்ணன் .
  டேய் சூப்பரா இருக்குடா கவிதை . இன்னிக்கு தான் ஆபீஸ்ல சர்வர் அக்சஸ் ஆச்சு. சரி நீ ஆபீஸ்ல வேல செய்யரியா இல்ல கவிதை எழுதரயா . கொஞ்சம் மானத்த வாங்காம ஒழுங்கா எழுது

  உன்னோட பட்ட பேரு என்னன்னு சொல்லட்டுமா இங்க ????

 27. அடலேறு சொல்கிறார்:

  காதலி, வருண், கோவி கண்ணன் எல்லாருக்கும்

  சொல்றது என்னன்னா எங்க அண்ணா பின்னுட்டம்

  போட்டாச்சு போட்டாச்சு .

 28. kadhali சொல்கிறார்:

  ஹாய் ராபின் ,

  முதல்ல நன்றி எனக்காக பின்னுட்டம் போட்டதிற்கு.

  உங்க தம்பி பதிவ படிக்கறப்ப நான் சின்ன வயசுல

  கிராமத்துல இருந்த நியாபகம் தான் வருது.

  பட்ட பேரு என்ன சொல்லுங்க ராபின் பின்னுட்டத்துல

  உண்மையாலுமே அழகான பதிவு. வாழ்த்துக்கள்

  அடலேறு. நன்றிங்க ராபின்

 29. அடலேறு சொல்கிறார்:

  காதலி அட அதுக்குள்ளே பின்னுட்டம் போட்டுடீங்க.

  நன்றிங்க காதலி

  //நான் சின்ன வயசுல கிராமத்துல இருந்த நியாபகம் தான் வருது.//

  அப்படின்னா இப்ப எங்க இருக்கீங்க??

 30. kadhali சொல்கிறார்:

  மென் பொருள் பொரியாழினியாக ஜப்பான் நாட்டில்

 31. varun சொல்கிறார்:

  First i would like to thank robin for posting comment.

  adaleru thanks for you also for made me to think about my

  days which i spent with my younger sister. You mention

  that line about
  //அப்போதெலாம் என்னிடம் பேசுவதயே குறைத்தாய். வார்த்தைகளை வாய்க்குள்லேயே முளுங்குவாய்//

  i also did the same with my sister. today only i called her to

  seeking sorry from her for this . You know what happened

  she got Cried. Thank you once again to runback the

  remembrance time which i spent with my sister. Thank you

  robin.

 32. அடலேறு சொல்கிறார்:

  அப்பறம் சும்மாவா தாய்லாந்துல இருந்து அண்ணா

  போன் பண்ணி சாரி கேட்டா எந்த பாசமான தங்கச்சி

  தான் அழாம இருப்பாங்க. நன்றிங்க வருண் தங்களின்

  உணர்வு பூர்வமான பின்னுட்டத்திற்கு .

 33. Amudham சொல்கிறார்:

  Ungalin annan patriya padhivu migavum arumai .. very touching .. ippo neenga back to square 1 .. kadhal kavidhaigal ezhudha aarambichuteenga .. sanda vechukalaama pola innum niraya ezhudhinal arumaiyaga irukkum .. idhu en thaazhmaiyaana karuthu 🙂

 34. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க அமுதம், அடலேறு பக்கதிர்க்கு தவறாமல்

  விசிட் அடிக்கறீங்க ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா மற்ற

  பதிவுகளும் வரும். இது என்னோட தாழ்மையான

  கருத்துன்னு சொல்லீருக்கீங்க . நீங்க தாழ்மையா இல்ல

  உரிமையான கருத்தே சொல்லலாம் 🙂

  அழியாத அன்புடன்
  அடலேறு

 35. Evano Oruvan சொல்கிறார்:

  Really Awesome…

  Thavamai Thavamirunthu….?!!!

 36. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க எவனோ ஒருவன். தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க

 37. Evano Oruvan சொல்கிறார்:

  kandippaga…
  Nichayamaaga…
  Satthiyammaaga…
  Unmaiyaaga…
  Sirappaaga…
  Seekiramaaga…

  Ungal valaipakkam varugiren…

 38. Suresh சொல்கிறார்:

  Adaleruvuku enathu vazhuthukal.

  Intha pathivu migavum arumai. Pala per vazhvilum ithu nichayamaka nadanthu inthirukum. Ithu avargaludaya ninaivai niyapagapaduthiyathu ennaiyum serthu.

  Unnudaiya pala ninaivukal thodara ennyudaya vazhuthukal.

 39. அடலேறு சொல்கிறார்:

  ஹாய் சுரேஷ் அண்ணா உங்க வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

  கண்டிப்பாக நினைவுகள் தொடரும் நம்ம தாஜ்மஹால்

  விசிட் கூட அந்த நினைவுல இருந்தாலும் இருக்கலாம்

 40. மாரிமுத்து சொல்கிறார்:

  எப்படி இந்த பதிவு என் கண்ணில் சிக்காம போச்சுன்னு தெரியல…
  எப்படி இந்த பதிவால் என் கண்ணீர் நிக்காம போச்சுன்னு தெரியல…
  உறங்கிக்கொண்டிருந்த நிறைய நினைவுகளை தட்டி எழுப்பி சென்றது…
  நன்றிங்க…

 41. gayathri சொல்கிறார்:

  அடலேறு
  @சாரதி

  அமாங்க எப்ப நெனைச்சாலும் சிரிப்பு தான் வரும்.

  அண்ணன் தம்பி, அக்கா தங்கை. அக்கா தம்பி,

  இதெல்லாம் எவ்ளோ அழகான உணர்வுன்னு

  அனுபவிட்சவங்களுக்கு தான் தெரியும் .

  itha padikkum pothey anupavikkanum pola iruku.
  but mudiyathey enna panrathu. enga vettuku naan than rani naan than raja

 42. Aravindan சொல்கிறார்:

  Same story here bro.. I miss my Elder Brother very much…

  Nice thought

 43. arun சொல்கிறார்:

  hai mr. adaleru….. realy nice…. endha madiri thoughtslam enaku cinna vayasula miss agi eruku…………. so bad………….. but u r lucky man……… keep it up

 44. இளஞ்செழியன் சொல்கிறார்:

  arumai….annen(brother) irukum tambikalal matumey unarthukolla kudiya kadhai…
  sandai vachukalama——>mazhalai natakalin marupakkam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s