ஒக்ரோபர், 2008 க்கான தொகுப்பு

தேவதைகளின் கவிதைகள்

Posted: ஒக்ரோபர் 23, 2008 by அடலேறு in Adaleru, காதல், தமிழ், love
குறிச்சொற்கள்:,

angel

இன்று எதோ அவசரமாக அலுவலகம் கிளம்புகையில்
உனக்கு முத்தம் தர மறந்ததால்,
“இன்னைக்கு முழுவதும் என்னை நினைக்காமல் இரு “
என்றாய் !! அடி போடி ஒரு நாள் முழுவதும் எப்படி
சுவாசிக்காமல் இருப்பது.

*************************************

உன்மீது கொண்ட காதல் சிறு வயது
கணக்கு பாடத்தையும் பொய்யாக்கி போட்டது ,

“எத்தனை முறை உன்னை சிந்தித்து சிந்தித்து
செலவு செய்தாலும் உன்னை பற்றிய நினைவுகள்
பெருகி கொண்டே தான் இருக்கிறது”

பிறகு எப்படி பழனிசாமி வாத்தியார் நடத்திய
செலவழித்தால் குறைந்து போகும்
என்ற கூற்றை நம்புவது

**************************************

எல்லாரையும் ஒரே மாதிரியாகவும்
என்னை மட்டும் ” ஒரு ” மாதிரியாகவும்
ஏன் பார்க்கிறாய்,
உனக்கு சந்தேகமே வேண்டாம்
உன் கூலான பார்வையில்
கூழாகி போனவனும்
நீ நீட்டாக உடுத்தும் உடையில்
கசங்கி போனவனும் நானே தான்

*************************************

Advertisements

சினிமா சினிமா – தொடர் பதிவு

Posted: ஒக்ரோபர் 17, 2008 by அடலேறு in தொடர் பதிவு
குறிச்சொற்கள்:, ,

என்னை தொடர் பதிவில் மாட்டி விட்ட நண்பர் மோகனுக்கு நன்றிகள்

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சின்ன வயசா இருக்கப்போ தூர்தர்சன்ல வாரா வாரம் ஞாயிறுக்கிழமை
சாங்காலம் அம்மா கடலை வருதுக்குடுக்க அப்பாவோட easy chair ல
சாஞ்சுட்டே படம் பாத்தது தான் அப்ப ஒரு 7 வயசு இருக்கும் .

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
நா, எங்க அண்ணா அப்பறம் சில டவுஸர் பாண்டிகளோட ஒரு தடவ பொள்ளாச்சி
நல்லப்பா தியேட்டர்க்கு ஜுராசிக்பார்க் பாக்க போனது தான் நியாபகம் இருக்கு

இ. என்ன உணர்ந்தீர்கள்?
பயத்தை உணர்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்ரமணிய புரம் சுவாதிவோட நடிப்புல(அழகுல!!) வழுக்கி விழுந்த சராசரி தமிழ் பசங்கள்ள நானும் ஒருத்தன் கண்கள் இரண்டால் பாட்டு ஒரு வாரம் டாப் என்னோட லிஸ்ட்ல

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
டெல்லி வந்து ரொம்ப காஞ்சு போய் சுத்துன தமிழ் படமே பாக்க முடியாததால போன வாரம் என் நெலமைய பாத்து நண்பன் ஒருத்தன் குடுத்த “ரன்” படம் தான் கடைசியா அரங்கிலன்றிப் பார்த்தது
( நான் தாண்டா சிவா ,” வீடு பூந்து உன் தங்கச்சிய தூக்கரண்டான்னு” சொன்னப்ப உணர்ச்சி வசத்துல ப்ரண்டோட ஆம்லட்ட தூக்குனதால பிரச்சன ஆனது வேற விஷயம்)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அன்பே சிவம் படம் பாத்துட்டு கண்ல தண்ணி வராத குறை தான். சுந்தர்.சி படம்ன்னு நம்பவே முடியாது

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சொல்ற மாதிரி தெரியல

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
எந்த தொழில்நுட்பமும் இல்லாதப்பவே விட்லச்சாரியார், லட்ட பறக்க வெச்சது மறைய வெச்சது இது தான் இன்னைக்கும் பெருசா தெரியுது.
அப்பறம் நண்பர் மோகன் சொன்னதையும் சேத்திக்கோங்க.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சின்ன வயசுல இருந்து வாரமலர் துணுக்கு மூட்டை படிக்கறது வழக்கம் .
அப்பறம் +2 படிக்கறப்ப நம்ம ஜோசுவா வாரம் தவறாம வண்ணதிரை வாங்கிட்டு
வந்து லாஸ்ட் பெஞ்ச்ல திருட்டு தனமா படிக்கற சுகமே தனி தான்

7.தமிழ்ச்சினிமா இசை?
நிறைய மாற்றம் தொழில்நுட்ப ரீதியாக. துல்லியமான இசை சப்தங்கள ரஹ்மான் ஹாரிஸ் கிட்ட தாராளமா கேட்கலாம். தமிழ்ச்சினிமா இசை அப்படின்னா இப்படி தான் இருக்குன்னு புரியவெட்ச இளையராஜா மாதிரி நிறைய பேரு தமிழ் ல இருக்கறதால தமிழ்ச்சினிமா இசை தேனிசை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
அது சொன்ன போய்டே இருக்கும் , CAST AWAY ,அப்கோளிப்டோ இதெல்லாம் மறக்க முடியாத காவியங்கள்னே சொல்லலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்பு மறைமுக தொடர்பு சைடுல தொடர்புன்னு எல்லா தொடர்பும் இருக்கு . எங்க அண்ணா V.Z துரை , சுப்பிரமணியம் சிவா அசிச்டண்டா இருந்தார் .

என்ன செய்தீர்கள்?
பாடலுக்கு மொக்க வரிகள் எழுதுன ஆனா அது எங்க அண்ணன கூட திருப்தி பண்ல.அண்ணா இயக்கர படத்துக்கான முதல் கட்ட வேலைகள் நடக்குது. அலப்பறைய போட்டு எப்டியாட்சும் ஒரு வரிய கண்டிப்பா பாட்டுல சேத்தீருவோம்ள

பிடித்ததா?
ரொம்ப

அதை மீண்டும் செய்வீர்களா?
வாய்ப்பு வந்தா பாக்கலாம் .

தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தெரியலயே ,ஆனா என்னோட மேம்பாட்டுக்கு உதவும்

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ல நிறைய நல்ல இயக்குனர்கள் இருக்காங்க. நிறைய பேரு வாய்ப்புக்காக
காத்திட்டு இருக்காங்க. மசாலா படங்கள் வரவு தமிழ் சினிமாவ எவ்வளவு தூரம் கொண்டு செல்லும்ன்னு தெரியல. ஆனா நல்ல படங்களின் வரவ பாக்கறப்ப தமிழ் சினிமாக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்குனே சொல்லலாம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுவா பத்தா நிலமை படுமோசம், ஆயிரக்கணக்கான பேர் வேலை இழப்பார்கள் ( எங்க அண்ணனும் தான் ) etc ect . தனியா பாத்தா ” ஏமிரா தீசுக்கோரான்னு ” தெலுங்க வச்சு ஒப்பேத்துவேன்,இல்லன்ன ஹாலிவுட் அதுவும் இலைன்னு சொன்னீங்ன்னா எண்ட சீப் மினீஸ்டர் EK நாயனார்ன்னு சொல்லிட்டு கேரளா கரையோரம் ஒதுங்க வேண்டியது தான்

இப்ப சிலரை நான் மாட்டிவிட வேண்டிய நேரம்
நண்பர்அருட்பெருங்கோ
தோழிஉமா
உங்களுக்கொரு சிநேகிதிபிரியா
ஜெனியின் தோழன் கார்க்கி

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

தேவதையின் பிறந்தநாள்

Posted: ஒக்ரோபர் 17, 2008 by அடலேறு in காதல், வாழ்த்து
குறிச்சொற்கள்:, ,


இன்றைய வானிலை நிலவரம்
பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்…

இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை…

பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று …

உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..

இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..

இன்று நீ நடக்கப்போகும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..

இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ மரியாதையை தான் மற்ற
பேருந்துகள் மத்தியில்…

நேற்றே அரசு அறிவித்து விட்டது
இன்று உன் வசிகரிக்கும் கண்களை
பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று

தேவதைகள் எல்லாம் ஒன்றாக கூடி
ஒருமனதாக முடிவு எடுத்து
விட்டார்கள் இன்று தேவதைகள்
தினமாக கொண்டாட …

எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது
உன் பிறந்த நாள் அன்று தேவதை நீ
இவ்வளவு மாற்றத்தை எற்படுத்தும் போது
நீ பிறந்த அன்று எவ்வளவு மாற்றத்தை
எற்படுத்தி இருப்பாய்.

நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
நானாக தான் இருக்க வேண்டும் ..
ஏனென்றால் உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நாளும் நான் தானே
புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

வணக்கம்,

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம்.
நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை
மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்.. தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்ச்சி பற்றி: குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

மேலும் விபரங்களுக்கு: 9444484868, 9894422268,

உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….
உங்களுடைய நண்பர்களையும் அழையுங்கள்.

அடலேறு

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!


பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல்.
போட நாயே என்பாள். புன்னகை புரி!!!

கனவுகளில் காதலியை தேடு.
நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ.

கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது
அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை
கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!!

தியானம் செய் !! கடவுளை காண்!!!
கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!!

காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக உட்கொள்!!!
கொட்டும் பனியில் உரைந்திடு!! தனி அறையில் சத்தமிட்டு அழு !!!

மொத்தத்தில் காதல் பைத்தியமாகி போ!!!

கடைசியாக சாகும் முன் கடிதம் எழுது
உன் பிணத்தை நிலவில் புதைக்க வேண்டும் என்று
தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போதாவது பார்பாள் அல்லவா!!!


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!