தேவதையின் பிறந்தநாள்

Posted: ஒக்ரோபர் 17, 2008 by அடலேறு in காதல், வாழ்த்து
குறிச்சொற்கள்:, ,


இன்றைய வானிலை நிலவரம்
பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்…

இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை…

பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று …

உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..

இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..

இன்று நீ நடக்கப்போகும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..

இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ மரியாதையை தான் மற்ற
பேருந்துகள் மத்தியில்…

நேற்றே அரசு அறிவித்து விட்டது
இன்று உன் வசிகரிக்கும் கண்களை
பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று

தேவதைகள் எல்லாம் ஒன்றாக கூடி
ஒருமனதாக முடிவு எடுத்து
விட்டார்கள் இன்று தேவதைகள்
தினமாக கொண்டாட …

எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது
உன் பிறந்த நாள் அன்று தேவதை நீ
இவ்வளவு மாற்றத்தை எற்படுத்தும் போது
நீ பிறந்த அன்று எவ்வளவு மாற்றத்தை
எற்படுத்தி இருப்பாய்.

நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
நானாக தான் இருக்க வேண்டும் ..
ஏனென்றால் உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நாளும் நான் தானே
புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. Hari hara krishnan சொல்கிறார்:

  நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
  நானாக தான் இருக்க வேண்டும் ..
  ஏனென்றால் உன்னை பார்க்கும்
  ஒவ்வொரு நாளும் நான் தானே
  புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்

  Nallarukku

 2. அடலேறு சொல்கிறார்:

  உங்களின் பின்னுட்டத்திற்கு நன்றிங்க ஹரி.

 3. மோகன் சொல்கிறார்:

  நண்பரே, உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும்.

 4. அடலேறு சொல்கிறார்:

  நன்றி மோகன். தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு

  தொடர் பதிவு இதுவரைக்கும் கலந்தது இல்ல. முதல்

  தடவையா களத்துல எறங்கர பாக்கலாம் டெப்பாசிட்

  கெடைக்குதான்னு

 5. uumm சொல்கிறார்:

  அருமை..அடலேறு…என்னுடய..பிறந்த நாள்..வாழ்த்துக்களும்….

 6. சுபாஷ் சொல்கிறார்:

  வாவ்
  மிக அருமையாக இருக்கிறது!!!
  வாழ்த்துக்கள்

 7. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க சுபாஷ் உங்களின் முதல்

  வருகைக்கும்,பின்னுட்டத்திற்கும்

 8. அடலேறு சொல்கிறார்:

  உங்களோட வருகைய கண்டிப்பா எதிர் பாப்பேன் சுபாஷ்

 9. arul சொல்கிறார்:

  nachinu irukku

 10. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க அருள் .தங்களின்

  வருகைக்கும் ,பின்னுட்டத்திற்கும்.

 11. Revathi சொல்கிறார்:

  Haiyooo Super…..

 12. Karthikeyan சொல்கிறார்:

  arumai thozha..

 13. JINI சொல்கிறார்:

  ROMPA NALLA ERUKKU

 14. Arunkumar சொல்கிறார்:

  Kalakura adaleru…………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s