தேவதைகளின் கவிதைகள்

Posted: ஒக்ரோபர் 23, 2008 by அடலேறு in Adaleru, காதல், தமிழ், love
குறிச்சொற்கள்:,

angel

இன்று எதோ அவசரமாக அலுவலகம் கிளம்புகையில்
உனக்கு முத்தம் தர மறந்ததால்,
“இன்னைக்கு முழுவதும் என்னை நினைக்காமல் இரு “
என்றாய் !! அடி போடி ஒரு நாள் முழுவதும் எப்படி
சுவாசிக்காமல் இருப்பது.

*************************************

உன்மீது கொண்ட காதல் சிறு வயது
கணக்கு பாடத்தையும் பொய்யாக்கி போட்டது ,

“எத்தனை முறை உன்னை சிந்தித்து சிந்தித்து
செலவு செய்தாலும் உன்னை பற்றிய நினைவுகள்
பெருகி கொண்டே தான் இருக்கிறது”

பிறகு எப்படி பழனிசாமி வாத்தியார் நடத்திய
செலவழித்தால் குறைந்து போகும்
என்ற கூற்றை நம்புவது

**************************************

எல்லாரையும் ஒரே மாதிரியாகவும்
என்னை மட்டும் ” ஒரு ” மாதிரியாகவும்
ஏன் பார்க்கிறாய்,
உனக்கு சந்தேகமே வேண்டாம்
உன் கூலான பார்வையில்
கூழாகி போனவனும்
நீ நீட்டாக உடுத்தும் உடையில்
கசங்கி போனவனும் நானே தான்

*************************************

பின்னூட்டங்கள்
 1. gangaI சொல்கிறார்:

  No comments machi, really great.
  நீ தமிழ் மீது கொண்ட காதல் என்னையும் காதலிக்க
  தூண்டுகிறது ஒரு தமிழச்சியை .

  • அடலேறு சொல்கிறார்:

   இதில் தாணடி தொலைத்தேன் என்று உன்னை எதிலாவது
   தொலைத்து போ உன்னை ஒரு தமிழச்சியிடம்.
   காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்.

 2. Elamparuthi சொல்கிறார்:

  Dear Satheesh,

  Your words in the poem are too nice and in very normal

  way . You should write many poems like this . I dont say

  dont feel for anything hereafter . Because your feelings

  becoming the golden words here. take care

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s