நவம்பர், 2008 க்கான தொகுப்பு

va-penny-karanam-illamal-kadhalikkalam
உன்னை நினைத்து உருகியது இல்லை,
உனக்காக கவிதை புனைந்ததும் இல்லை,
உன்னுடைய நினைவுகள் என்னுடைய தூக்கத்தை மறக்கடித்ததும் இல்லை !!
அழகு சிலையாம் நீ ! ஆனால் உன்னுடைய அழகு என்னை சலனப்படுத்தியது கிடையாது,
எல்லாரையும் திமிராக பார்க்குமாம் உன் சுடிதார் பட்டாம் பூச்சிகள் ! !
எனக்கு அந்த பட்டாம் பூச்சிகள் நிறம் கூட நியாபகத்தில் இல்லை,
படுக்கையில் உன்னை நினைத்து தூக்கம் வராமல் புரண்டது கிடையாது,
கனவுகளில் உன்னை தொலைத்து தேடியதும் கிடையாது,
இப்படி எந்த காரணம் இல்லாமல் வருவதற்கு பெயர் தான் காதலம்
அதனால் தான் சொல்கிறேன்
” வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம் ”
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

அன்புள்ள அப்பாவிற்கு

Posted: நவம்பர் 5, 2008 by அடலேறு in வாழ்த்து
குறிச்சொற்கள்:,

me-and-my-cycle

அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த  தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில்  சைக்கிளின்  முன் bar  என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு  என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில்  நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது  நியாபகம் இருக்கிறதா? 

எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே இருக்கும் உங்கள் முகம் உங்கள் தோளிற்கு மேல் வந்ததும் என்னுடைய கோரிக்கைகள் முழுவதும் அம்மா முலமாகவே உங்களிடம் வரும்.  ஒவ்வொரு தடவையும் அது எனக்கு தேவை தான என்று அறிந்து தான் முடிவு எடுப்பீர்கள். எடுத்த  பொருளை எடுத்த இடத்தில் வைப்பது முதல் நேரம் தவறாமல் கடைபிடிக்கும் உங்களின் ஒவ்வொரு பழக்கமும் தான் இன்று என்னை முழுதுமாக அக்கிரமித்து உள்ளது.
+2 படிக்கும் போது  மறைத்து வைத்திருந்த என்னுடைய காதல் கடிதத்தை அம்மா உங்களிடம் காட்டிய போதும் கூட மிக மிக மென்மையாக எனக்கு புரிய வைத்தீர்களே  அப்பா.எப்போதும்  காலையில் லேட்ஆக  எழும்  போதே உங்களின் திட்டுக்களுடன் தான் எழுவது   வழக்கம் ஆனால் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து இருக்கும் இப்போதெல்லாம் நினைத்து பார்க்கிறேன் ,  காலை 8 மணி வரை நிம்மதியான உறக்கம் , ஆனாலும் உங்களின் திட்டுக்கள்  இல்லாமல் இந்த காலைகள் எனக்கு வெறுமையாகவே போகிறது. 
   
ஒவ்வொரு முறையும் நான் நெடுந்தூர ஓட்ட போட்டியில் ஜெய்க்கும் போதெல்லாம் என்னமோ  நீங்களே ஓடி ஜெய்த்தது போல பூரித்து போவீர்கள் ஆனால் அந்த பூரிப்பை கூட என்னிடம்  காட்டாமல் , அம்மா முலமாக தான் எனக்கு தெரியும் நீங்கள் பூரித்துப் போனது அதனால் உங்களிடம் பாராட்டு வாஙகி விட வேண்டும் என்றே   நான் ஓடி ஓடி வாங்கிய பதக்கங்கள் இன்று உங்கள் பெயரை தான் சத்தமிட்டு சொல்கிறது என் அறையின் மேசைக்குள் இருந்து.    

உங்களுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடியதாக எனக்கு நியாபகமே இல்லை, இப்போது கூட உங்களுக்கு வாழ்த்து அட்டையாவது அனுப்ப நினைக்கிறேன் ஆனால் ” இதுக்கு போய் எண்டா காச செலவு” பண்ற என்ற திட்டு நிச்சயமாக வரும்
ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவே இல்லை அப்பா உங்களுக்கு என் மீது தான் இவ்வளவு பாசம் இருக்கிறதே ஆனால் அதை ஒரு முறை கூட நேரடியாக என்னிடம்  முழுமையாக காட்டவில்லயே ஏன் ???    

எனக்கு மட்டும் அல்ல என்னை போல நிறைய பேருக்கும் இப்படித்தான் ஒரு சந்தேகம்   “எல்லா அப்பாவுமே இப்படி தானா” ???

ஆனாலும்ஒன்றுசொல்கிறேன்அப்பா                                                                                                 
உங்களுக்கு ஒருமுத்தம் கொடுக்க ஆசை இந்த பிறந்தநாளுக்கு !!!                                         

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!